வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்! சிவப்பு, பச்சை நிறத்தில் மிளிர்ந்த லைட்.. திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பாழவனகுடி கிராமம் அருகே விவசாய நிலத்தில் மர்ம பொருள் ஒன்று கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிக்னல் வரும் ரெசீவர் போன்ற மர்ம பொருள் கிடந்தது பற்றி கிராமத்தினர் போலீசாருக்கு தெரிவித்த நிலையில், இந்த மர்ம பொருள் எப்படி இங்கே வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே பழவனகுடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விவசாயி விஜயன் என்பவர் தனது நிலத்தில் பயிறு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று விஜயன் தன் நிலத்தில் மருந்து அடிப்பதற்காக காலையில் சென்றுள்ளார். அப்போது அவரது வயலில் மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. டவர் ரெசீவர் போன்று, சிவப்பு மற்றும் பச்சை நிற லைட் விட்டு விட்டு எரிந்ததால் அச்சமடைந்த விவசாயி இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வைப்பூர் காவல் நிலைய போலீசார் அந்த மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த மர்ம பொருள் எதும் எலக்ட்ரிக் சாதனமா அல்லது வேறு ஏதும் பொருளா என்று தெரியாததால் அது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். வானிலை நிலவரத்தை பரிசோதிக்க பலூனுடன் இணைத்து பறக்க விடப்படும் கருவி போன்று இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
எனினும் அதனை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. விவசாய நிலத்தில் திடீரென கிடந்த மர்ம பொருளால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். முன்னதாக இந்த கிராமம் அருகே நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்திருந்தார். மகளிர் சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனைக்கூட்டம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்க இரண்டு முறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். இதனால் இந்த மர்ம பொருள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications