ஆவடி இல்லத்தில் நாசர்! ஆதங்கத்துடன் குவியும் ஆதரவாளர்கள்! யாரும் வாய் திறக்கக் கூடாது என உத்தரவு!
திருவள்ளூர்: அமைச்சர் பதவியை பறிகொடுத்த நாசர், ஆவடியில் உள்ள தனது இல்லத்தில் காலை முதலே ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
நாசரை ஆதங்கத்துடன் சந்திக்க வரும் ஆதரவாளர்கள், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மீண்டும் நாசருக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என தலைமையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்ப திட்டமிட்டிருந்தனர்.
இதனை அறிந்த நாசர், பதறிப்போய் அது போல் எதுவும் செய்யக்கூடாது என்றும் யாரும் வாயே திறக்கக் கூடாது எனவும் ஆதரவாளர்களுக்கு கட் அண்ட் ரைட் உத்தரவு போட்டிருக்கிறார்.

இது நிரந்தரமல்ல என்றும் நிச்சயம் தலைவர் மீண்டும் எனக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தருவார் எனவும் ஆதரவாளர்களிடம் நம்பிக்கை பொங்க கூறி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் நாசர்.
அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட வருத்தம் இருப்பினும் அதனை தன்னை சந்திக்க வரும் தொண்டர்களிடத்தில் நாசர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கிறார்கள் அவரை அவரது வீட்டில் இன்று காலை சந்தித்து திரும்பியவர்கள்.
வழக்கம்போல் சிரித்து பேசவிட்டாலும் ஓரளவு ஸ்மைலிங் முகத்துடன் தன்னை சந்திக்க வந்தவர்களிடத்தில் பேசியிருக்கிறார். அமைச்சர் பதவி தானே போயிருக்கிறது, மாவட்டச் செயலாளர் பதவி இருக்கிறதே அது போதும் என ஆதரவாளர்கள் தங்களை தேற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

ஆவடி நாசரை பொறுத்தவரை கொஞ்சம் கோபக்காரர் என்றாலும் தன்னிடத்தில் உதவி கேட்டு வரும் கட்சிக்காரர்களுக்கு அதனை தட்டாமல் செய்து கொடுக்கக் கூடியவர்கள் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
இதனால் தான் அவர் என்னதான் கோபப்பட்டாலும் அதையும் மீறி அவர் பின்னால் நிற்பதாக தெரிவிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications