சனாதனம்! 2 சுற்றறிக்கையும் வாபஸ்.. திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் பேச்சு போட்டியே ரத்து
திருவாரூர்: அண்ணா பிறந்தநாளையொட்டி சனாதன எதிர்ப்பு பேச்சு போட்டிக்கான சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சனாதன தர்மம் குறித்து மாணவிகள் கருத்துகளை பகிரலாம் என புதிய சுற்றறிக்கை வந்தது.இந்த நிலையில் அந்த சுற்றறிக்கையும் வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 115 ஆவது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் ஏற்கெனவே பற்றி எரிந்து கொள்ளும் ஒரு விஷயம் குறித்து பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூர், கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டு முதல்வர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்.
இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை கேட்டு மாணவர்களின் மனதில் நஞ்சை விதைப்பதா என வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கல்லூரி முதல்வர் ராஜாராமனுக்கு பாஜக கண்டனங்களை தெரிவித்தது.
மேலும் அவரை கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து விலக்கக் கோரி செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று 3 மணிக்கு அந்த திருவிக அரசு கலைக் கல்லூரி முன்பு தமிழக பாஜக பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்லூரி (பொறுப்பு) முதல்வர் ராஜாராமன் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் இக் கல்லூரி சுற்றறிக்கை நாள் 11.09.2023 ல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் கல்லூரி மாணவிகள் அக்கருத்துகளை முதல்வரின் சுற்றறிக்கையின்படி அல்லாமல் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே மேற்காண் பொருள் குறித்து செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில் புதிய சுற்றறிக்கையும் வாபஸ் பெறப்பட்டு பேச்சு போட்டியும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications