திருவாரூர் மாவட்ட அமைச்சரின் வேலையே இதுதான்.. டிஆர்பி ராஜாவை டார்கெட் செய்த விஜய்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: நாகையை தொடர்ந்து விஜய் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் இங்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவருடைய வேலை என்ன என்று தெரியுமா? என திமுக அமைச்சர் டிஆர்பி ராஜாவை பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து பேசினார். மேலும் கூட்டம் ஓட்டாக மாறாது என விமர்சனம் வைக்கப்படும் நிலையில் அது குறித்தும் விஜய் பதில் அளித்து பேசினார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகையில் பரப்புரை செய்தார். தொடர்ந்து இன்று மாலையில் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார். திருவாரூரில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழி நெடுகிலும் தொண்டர்கள் மக்கள் ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர். விஜய்யும் புன்னகையோடு அவர்களுக்கு கை அசைத்தபடியே வந்தார்.

serving-the-cm-family-is-the-only-job-of-thiruvarur-minister-vijay-targets-trb-raja

விஜய்யின் பிரச்சார வாகனத்தை சுற்றி நின்றுகொண்டு அவரை பார்க்க முண்டியடித்தனர். சிலர் விஜய்க்கு வேல் கொடுத்தனர். சிலர் புகைப்படங்களும், ஆரத்தியும் எடுத்து வரவேற்றனர். சிறுவன் ஒருவனுக்கு விஜய் தான் அணிந்திருந்த மாலையை சூடினார். தொடர்ந்து திருவாரூர் நகருக்குள் வந்ததும் விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டிஆர்பி ராஜாவை விமர்சித்த விஜய்

இதனை விஜய் பிரச்சார வாகனம் மேல் ஏறி பிரமாண்ட மாலையினை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நாலாபுறமும் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் விஜய் பரப்புரை செய்தார். அப்போது அவர் திருவாரூர் மாவட்டத்தில் சாலை வசதிகள் கூட சரியாக இல்லை.. நெல் கொள் முனையங்களில் லஞ்சம்.. முதல்வரின் சொந்த மாவட்டமே கருவாடாக காய்கிறது என்றெல்லாம் விமர்சித்தார்.

குறிப்பாக திமுக அமைச்சர் டிஆர்பி ராஜாவை பெயரை சொல்லாமல் விமர்சித்து பேசி இருந்தார். திருவாரூர் மாவட்டத்தில் திமுக அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னன்னு தெரியுமா? அவருக்கு எப்போதும் சிஎம் குடும்பங்களுக்கு பணிவிடை செய்வது தான் வேலையாக இருக்கிறது. இங்குள்ள மக்களுக்கு எதையும் செய்யாமல் இருக்கிறார். அவருக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை நாம் உணர்த்துவோம். என்று கூறினார்.

ஊழல் இல்லா தமிழகம்

தொடர்ந்து பேசிய விஜய், "பொய்யான தேர்தல் அறிக்கையை ஒருபோதும் கொடுக்க மாட்டோம்.. குடும்ப ஆதிக்கம் இல்லாத, பொதுமக்கள் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தான்.. அடிப்படை தேவை, விஷயங்களில் சமரசம் கிடையாது.. ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம்.. ஊழல் இல்லாத தமிழகம்.. உண்மையான மக்களாட்சி.. மக்கள் மனசாட்சிப்படி உண்மையான ஆட்சி.. நல்லதே நடக்கும்.. நன்றி.. இவ்வாறு அவர் பேசினார்.

சும்மா கூடுற கூட்டமா?

இதன் பிறகு கழுத்தில் அணிந்திருந்த பச்சை நிற துண்டை தலையில் கட்டினார். தொடர்ந்து தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். அப்போது ஒரு டவுட் என்று சொல்லி தொண்டர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

அதாவது இது எல்லாம் சும்மா கூடுற கூட்டமாம்.. ஓட்டு போடமாட்டாங்கன்னு சொல்றாங்க.. இது என்ன சும்மா கூடுகிற கூட்டமா.. சொல்லுங்கள் என விஜய் கேட்டதும் தொண்டர்கள் ஆர்ப்பரித்தப்படி இல்லை என கத்தி கூறினர். இது சாதாரண கூட்டம் கிடையாது.. ஆட்சி மாற்றத்திற்கான கூட்டம்.. என்று விஜய் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+