திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆன்மீகப் பணிகளில் முதல்வர் காட்டும் அக்கறைக்கு பாராட்டு குவிகிறது..சொல்கிறார் சேகர்பாபு

Google Oneindia Tamil News

திருவாரூர் : ஆன்மீக உலகத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் செய்து வரும் பல்வேறு நற் பணிகளை, ஆன்மீகவாதிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ஆன்மிக உலகத்திற்கு CM ஸ்டாலினின் பணி - அமைச்சர் சேகர்பாபு
    Spiritualists who appreciate the spiritual works of the CM Stalin Says Sekar Babu

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழக அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பகுதிகளில் தருமபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள சீர்காழி சட்டநாதர் கோவிலுக்குச் சென்று வருகை சுவாமி தரிசனம் செய்த அமைச்சர், பின்னர் கோவில் புணரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவெண்காடு சுவேதாரனேஸ்வரர் கோயிலுக்குச் சென்று அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலை சுற்றி நடைபெறும் பராமரிப்புப் பணிகள் குறித்து கோயில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து, உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜா திருக்கோவிலில் ஆய்வு மேற்கொண்ட சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மனுநீதி சோழன் வாழ்க்கை வரலாற்றை விளக்குகின்ற வகையில் மண்டபம் ரூ. 29 லட்சம் செலவில் புனரமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கமலாலய குளத்தில் படிக்கட்டுகள் இல்லாத பகுதிகளில் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.

    இந்து சமய அறநிலைத்துறை பொறுத்த வரை சிலைகளை மீட்பதற்கென்று ஒரு தனி துறை இருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை கடத்தப்பட்ட 13 சிலைகளை சிலைகளை மீட்கப்பட்டன. கடத்தப்பட இருக்கின்ற சிலைகளையும் மீட்டிருக்கிறோம். வெளிநாட்டில் இருக்கின்ற சிலைகளை கண்டறிந்து அதனை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

    கடந்த 11 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தங்கத்தை பிரிப்பதற்கான திட்டம் செயல்பாட்டில் இல்லை. இதனை மூன்று மண்டலங்களாக பிரித்து மூன்று ஒய்வு பெற்ற நீதிபதிகளை நியமித்து அவர்களது நேரடி பார்வையில் தங்கத்தை பிரிப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தங்கம் எந்த விதமான பயன்பாட்டிலும் இல்லாததை கண்டறிந்து. ஓய்வு பெற்ற நீதி அரசர்களின் தலைமையில் முழுவதும் பரிசோதித்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தங்கத்தை உருக்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    உண்மையிலேயே ஆன்மீக உலகத்திற்கு தமிழகம் முதல்வர் செய்கின்ற இந்த பணி, ஆன்மீகவாதிகளால் பாராட்டப்படுகிறது என்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

    English summary
    Minister Sekar Babu said that spiritualists are appreciating the Chief Minister MK Stalin who is engaged in spiritual work.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X