சென்னை பாணியில் பரபரப்பு.. திருவாரூரில் ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ் எஸ்ஐ

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை உதவி ஆய்வாளர் சுட்டுப்பிடித்துள்ளார். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி மனோஜ் நிர்மல் ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் காலில் சுட்டு பிடித்துள்ளார். குண்டு காயம் பாய்ந்த ரவுடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் அண்மையில் பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி ரவுடி ஒருவரை சுட்டுப்பிடித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை டி.பி.சத்திரம் பழைய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த 35 வயதாகும் பிரபல ரவுடியான , ஏ கிரேடு ரவுடியாவார். இவர் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

Tiruvarur police


மூன்று கொலை வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட ரோகித் ராஜ் ஜாமீனில் வெளிவந்த பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தலைமறைவாக இருந்து வந்தவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்துவரும் ரவுடி ரோகித் ராஜை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தலைமறைவாக இருந் ரவுடி ரோகித் ராஜை சுற்றி வளைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி ரோகித் ராஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.பி.சத்திரம் பகுதியில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலைமை காவலர்களான சரவணகுமார் மற்றும் பிரதீப் ஆகிய இருவரையும் கையில் வெட்டிவிட்டு ரவுடி ரோகித் ராஜ் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது, தற்காப்புக்காக பெண் உதவி ஆய்வாளர் கலைச்செல்வி துப்பாக்கியை எடுத்து ரோகித் ராஜ் காலில் சுட்டுப் பிடித்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியை சென்னை போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்தும் பாராட்டினார்.

இந்நிலையில் சென்னை பாணியில் திருவாரூரிலும் பிரபல ரவுடி ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ரவுடியை உதவி ஆய்வாளர் சுட்டுப்பிடித்திருக்கிறார். கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி மனோஜ் நிர்மல் ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் காலில் சுட்டு பிடித்துள்ளார். குண்டு காயம் பாய்ந்த ரவுடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+