மன்னார்குடியில் போலீசுக்கு மட்டுமல்ல.. திருடர்களுக்கே அல்வா.. சொந்த வீட்டிலேயே.. கம்பி எண்ணும் லாவண்யா

Subscribe to Oneindia Tamil

திருவாரூர் : மன்னார்குடி அருகே திருடர்கள் 2 பவுன் நகையைத்தான் திருடி இருக்கிறார்கள். ஆனால் வீட்டின் உரிமையாளர் மனைவி லாவண்யா, 52 பவுன் நகை கொள்ளை போனதாக கூறி, 50 பவுன் நகையை மறைத்து வைத்து ஏமாற்றி உள்ளார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் இவருக்கு வயது 45. இவருடைய மனைவி லாவண்யா. அருணாச்சலம் வெளிநாட்டில் வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் நாடு திரும்பி சொந்த ஊரான மன்னார்குடிக்கு வந்துள்ளார்.

Sudden twist in case of theft of 52 pounds of jewellery in Mannargudi: the house owner arrested by police

இந்நிலையில் அருணாச்சலம் கடந்த மாதம் 28-ந் தேதி மன்னார்குடி அருகே சோனாபேட்டை கிராமத்தில் வாழ்ந்து வரும் தனது தாயாரை பார்க்க புறப்பட்டு சென்றுள்ளார். அருணாச்சலத்துடன் அவரது மனைவி லாவண்யா, மகளும் வந்துள்ளனர். அருணாச்சலம் வீட்டை பூட்டி விட்டுத்தான் அம்மாவை பார்க்க போயிருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 30-ந் தேதி இரவு குடும்பத்துடன் வீடு திரும்பி உள்ளார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்திருக்கிறது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்துள்ளது.

இதனைக் கண்ட அருணாச்சலம் அதிர்ச்சி அடைந்து மன்னார்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அருணாச்சலம் வீட்டுக்குள் சென்று கொள்ளை நடந்தது எப்படி என்று பார்த்ததுடன் பல்வேறு தகவல்களை விசாரித்தனர்.

மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அருணச்சாலம், தனது வீட்டு பீரோவில் இருந்த 52 பவுன் நகைகள் கொள்ளை போய்விட்டதாகவும் மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து கைவரிசை காட்டிவிட்டதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பார் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார்,அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அருணாச்சலம் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் புதுச்சேரி பாகூரை சேர்ந்த பிரபாகரன்(36), காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்(35), வடுவூரை சேர்ந்த முத்து ஆனந்த்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

நகைகள் மறைப்பு: இந்த விசாரணையில் 3 பேரும் அருணாச்சலம் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது நாங்கள் தான். ஆனால் 2 பவுன் நகை, ஒரு வெள்ளி விளக்கு, 2 செல்போன்கள் மட்டுமே கொள்ளையடித்தோம் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து அருணாச்சலம் மனைவி லாவண்யாவிடம் போலீசார் எத்தனை பவுன் நகை இருந்தது என்று தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அவர், 50 பவுன் நகைகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததை ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து 50 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே 2 பவுன் நகையை கொள்ளையடித்த பிரபாகரன், முத்து ஆனந்த், ராஜ்மோகன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாவண்யா 50 பவுன் நகைகளை ஏன் மறைத்து வைத்திருந்தார்? என போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வீட்டு உரிமையாளர் லாவண்யாவையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், லவண்யாவை சிறையில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+