தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்... டிடிவி தினகரன் வேண்டுகோள்
திருவாரூர்: இடைத்தேர்தலை தள்ளி போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவாரூரில் உள்ள எம் ஜி ஆரின் சிலைக்கு, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து டிடிவி தினகரன் பேசியதாவது: எம்.ஜி.ஆர். மறைந்திருந்தாலும் நூறாண்டுகள் கடந்தும் அனைவரது உள்ளங்களிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை தள்ளிப் போட்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டும் வகையிலும், தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி கூட்டணி வைத்து போட்டியிடும். இதற்காக சில மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அமமுக தனித்துப் போட்டியிடும்.
எங்களுக்கு வெற்றிவாய்ப்பு நன்றாக உள்ளது. நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications