மலரும் மத நல்லிணக்கம்... காளியம்மன் கோயிலுக்கு சிமெண்ட் மூட்டைகள் அளித்த தமிமுன் அன்சாரி..!
திருவாரூர்: காளியம்மன் கோயிலுக்கு சிமெண்ட் மூட்டைகள் அளித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரிக்கு ஆய்குடி கிராமமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கோயில் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு சமூக நல்லிணக்கத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்துள்ளார் தமிமுன் அன்சாரி.
இஸ்லாமியராக இருப்பினும் கூட பொதுவாழ்க்கை என வந்த பிறகு அனைத்துச் சமூக மக்களையும் அரவணைத்துச் செல்வதில் கவனமாக செயல்படுகிறார் இவர்.

திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் பொதக்குடி அருகே உள்ள ஆய்குடி என்ற சிறு கிராமத்தில் காளியம்மன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயில் முழுக்க முழுக்க கிராம மக்களால் கட்டப்படுவதால் அவர்களது சக்திக்குட்பட்ட வகையில் கட்டுமானப் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சியினர் காளியம்மன் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு சிமெண்ட் மூட்டைகள் வழங்கி உதவியுள்ளனர்.

நேரில் பார்வை
இதனை எதிர்பாராத ஆய்குடி கிராம மக்கள் தமிமுன் அன்சாரியை ஒரு முறையாவது கோயில் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்காக நேரில் வரவேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பொதக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ஒருவர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க சென்ற தமிமுன் அன்சாரி, ஆய்குடி மக்களின் அழைப்பை ஏற்று காளியம்மன் கோயில் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

மகிழ்ச்சி
இஸ்லாமியர் எங்கு இந்து கோயிலுக்கு வரப் போகிறார் என நினைத்த நிலையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தமிமுன் அன்சாரி அங்கு சென்றது ஆய்குடி மக்களை மகிழ்ச்சியடையச் செய்தது. இதனிடையே கட்டுமானப் பணிகளை கவனமுடன் மேற்கொள்ளுமாறு பணியாளர்களை கேட்டுக்கொண்ட அவர் அங்கிருந்து புறப்பட்டார்.

டெல்டா
தேர்தலுக்கு பிறகு தஞ்சை, நாகை, திருவாரூர், என டெல்டா மாவட்டங்களில் தனிக் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications