மாமியாரையே "வளைக்க" பார்த்த இளைஞர்.. கோபத்தில் மருமகன் எடுத்த முடிவு.. குலுங்கிய திருவாரூர்!
திருவாரூர்: திருவாரூரில் தனது மாமியாருடன் நீண்ட நாட்களாக நெருக்கமாக பழகி வந்த நபரை மருமகன் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சண்டையில் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசவம்
திருவாரூர் தாய் சேய் அரசு மருத்துவமனை விஜயபுரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு வேன் ஓட்டுநராக பணியாற்றுபவர்தான் சுரேஷ். இவருக்கு கடந்த ஓராண்டு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் அவரது மனைவிக்கு இதே மருத்துவமனையில் தற்போது குழந்தை பிறந்துள்ளது. குழந்தை மற்றும் மனைவியை கவனித்துக்கொண்டு சுரேஷ் மருத்துவமனையில் இருந்துள்ளார். அப்போது குழந்தையை பார்க்க தச்சராக உள்ள கண்ணன் அங்கு வந்துள்ளார்.

மோதல்
இதனை கண்ட சுரேஷ் என் குழந்தையை பார்க்க ஏன் வருகிறாய் என கேட்டுள்ளார். இது வாக்குவாதம் ஆன நிலையில் சுரேஷ் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணனை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத கண்ணன் பதிலுக்கு மீண்டும் தாக்கியுள்ளார். இருவரும் மருத்துவமனை வளாகத்திலேயே கட்டி புரண்டு சண்டையிட்டுள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறியடித்து கொண்டு ஓடியுள்ளனர். பெண்களும் குழந்தைகளும் பயத்துடன் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றுள்ளனர்.

கத்திக்குத்து
சண்டை உக்கிரமடைந்த நிலையில் சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை சரமாரியாக குத்திவிடுகிறார். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் சரிந்து விழுந்துள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து கண்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது கண்ணன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுரேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்பு
விசாரணையில், சுரேஷின் மாமியாரிடம் கண்ணன் அடிக்கடி பேசி பழகி வந்ததாக தெரிய வருகிறது. இதனை சுரேஷ் பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் இந்த பழக்கம் நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்துள்ளது என சுரேஷ் விசாரணையில் கூறியுள்ளார். இந்த சூழலில்தான் சுரேஷின் குழந்தையை பார்க்க கண்ணன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மோதல் வெடித்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கத்தி குத்து சம்பவம் நடந்த நிலையில், மருத்துவமனைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications