திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்.. டிடிவி தினகரன் அதிரடி!
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
Recommended Video

திருவாரூர்: திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக இன்றுதான் வேட்பாளரை அறிவிக்க உள்ளது. இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அமமுக தற்போது வேட்பாளரை அறிவித்துள்ளது. ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. கடந்த 3ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது.

பெரிய கேள்வி
கடந்த சில நாட்களாக திருவாரூர் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் யாரை வேட்பாளராக நிறுத்த போகிறது என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. அதிமுக, திமுகவை எதிர்த்து அமமுக சார்பாக யார் நிற்க போகிறார்கள் என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய சஸ்பென்ஸாக இருந்தது.

ஆலோசனை நடந்தது
இதற்காக கடந்த இரண்டு நாட்களாக அமமுக சார்பாக டிடிவி தினகரன் தலைமையில் இதற்காக ஆலோசனை கூட்டம் நடந்தது. சில முக்கிய உறுப்பினர்களுடன் தினகரன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இரண்டு பேர்
அமமுகவைப் பொறுத்தவரை இரண்டு பேர் வேட்பாளர் ரேஸில் இருந்தனர். கடந்த 2011 தேர்தலில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த குடவாசல் ராஜேந்திரன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டார். அதேபோல் அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டார். இருவரும் அமமுகவில் மிக முக்கியமான உறுப்பினர்கள்.

தேர்வு செய்யப்பட
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமமுக மாவட்டச் செயலாளரான எஸ்.காமராஜ், முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் தொகுதியில் இவர் மிகவும் பிரபலமான நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications