ஸ்டாலின் ஃபார் திருவாரூர்.. இடைத்தேர்தலில் அவர்தான் நிற்க வேண்டும்.. திமுகவில் வலுக்கும் கோரிக்கை
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
சென்னை: திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தயாராகி வருகிறது. இதற்கு திமுகவும் தயாராக தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

ஸ்டாலின் கோரிக்கை
இந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் திமுகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். நேற்று ஸ்டாலினை சந்தித்த திமுக நிர்வாகிகள் அவரிடம் இந்த கோரிக்கையை நேரடியாக வைத்து இருக்கிறார்கள். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் இடத்தில் ஸ்டாலின் நிற்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

பூண்டி கலைவாணன் கோரிக்கை
நேற்று ஸ்டாலினை சந்தித்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் இதே கோரிக்கையை வைத்ததாக தெரிகிறது. திருவாரூர் தொகுதியில் ஸ்டாலின்தான் நிற்க வேண்டும் என்று பூண்டி கலைவாணன் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கிறார்கள். திருவாரூர் மாவட்ட உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வைத்ததாக கூறப்படுகிறது.

டிஆர்பி ராஜா கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தொகுதியின் எம்எல்ஏவான திமுகவை சேர்ந்த டிஆர்பி ராஜாவும் இதே கோரிக்கையை வைத்துள்ளார். எல்லா உறுப்பினர்களும் ஸ்டாலின்தான், திருவாரூரில் நிற்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஸ்டாலின் திருவாரூரில் நின்றால் சிறப்பாகத்தான் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
|
வைரல் ஆனது
இதற்காக இணையத்தில் #MKSforTIRUVARUR எம்கேஎஸ் ஃபார் திருவாரூர் என்று ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. மு.க ஸ்டாலின் திருவாரூரில் நிற்க வேண்டும் என்ற பொருளில் இந்த டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் பலர் இதே கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.

எப்போது முடிவு
திமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக உறுப்பினர்களின் விண்ணப்பங்களை திமுக தலைமை பெற்று வருகிறது. இந்த விண்ணப்ப பரிசீலனைக்கு பின் விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் செய்யப்படுவார்கள். யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை திமுக இந்த வாரம் முடிவு செய்யும் என்று கூறுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications