திருவாரூர் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை.. காரில் வந்த கும்பலுக்கு வலை

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் அருகே மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் என்பவரை காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் எரவாஞ்சேரி அருகே உள்ள மணவளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (48). இவர் திமுகவைச் சேர்ந்தவர். மணவாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார்.

Thiruvarur murder: manavalanallur panchayat President Ganesan hacked to death

நேற்று இரவு 9 மணி அளவில் பெட்ரோல் பங்க் அருகே தனது இருசக்கர வாகனத்தில் கணேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் கணேசனை வழிமறித்து, நடுரோட்டில் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது.

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த கணேசனை அங்கிருந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் கணேசன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து எரவாஞ்சேரி போலீசார் வழககு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+