ஆடு மேய்க்க ஆற்றங்கரைக்கு போன பெண்.. பின்னாடியே அஜித்குமார்.. அரசு டாஸ்மாக் மீது பாய்ந்த திருவாரூர்
திருவாரூர்: பூரண மதுவிலக்கு என்பது நம்முடைய தமிழகத்தில் கனவாகவே போய்க் கொண்டிருக்கிறது.. பூரண மதுவிலக்கை படிப்படியாக அரசு அமல்படுத்தலாம் என்று நீதிமன்றங்களும் கருத்து தெரிவித்தபடி உள்ளன.. இந்நிலையில், ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளில் நடக்கும் சம்பவங்கள், மதுப்பிரியர்களுக்கு கிலியையும், கலக்கத்தையும் தந்துவருகிறது. அந்தவகையில், திருவாரூரில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ளது பெருமாளகரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் அந்த 40 வயது பெண்.. இவர் ஆடுகளை வளர்த்து, பிழைப்பு நடத்தி வருகிறார்..

ஆடு மேய்க்க சென்ற பெண்
இந்நிலையில், சம்பவத்தன்று ஆடுகளை அழைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார்.. தன்னந்தனியாக சென்றதுடன், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது, மதுபோதையில் வந்த 2 பேர், தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி ஆபாசமாக நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடியுள்ளார். ஆனால், 2 காமுகர்களும், அப்பெண்ணை ஓடிக்கொண்டிருந்த பாண்டவையாற்றில் தள்ளியதுடன், நீரிலேயே அவரை மூழ்கடித்துள்ளனர்.
பிறகு 2 பேரும் ஆற்றுக்கரையிலிருந்து பதற்றமாக ஒடிவந்துள்ளனர்.. அந்த வழியாக வந்த மக்கள், 2 பேரும் ஏன் பதற்றமாக, ஆற்றங்கரையிலிருந்து ஓடிவரவேண்டும் என்று சந்தேகப்பட்ட மக்கள், ஆற்றங்கரைக்கே சென்று பார்த்துள்ளனர்..
அப்போதுதான் அந்த பெண் அலங்கோலமாக மயங்கி கிடப்பதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரி பரிசோதித்தத டாக்டர்கள் அந்த பெண், ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்துவிட்டனர்.. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொரடாச்சேரி போலீஸார் விசாரணையை துவங்கினார்கள்..
அத்துமீறி அட்டகாசம்
40 வயது பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டு, ஆற்று நீரில் மூழ்கடித்தது திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அஜித்குமார் என்பது தெரியவந்தது.. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்ய போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரிதாபமாக உயிரிழந்த பெண் திருமணமானவர்.. கணவர் பெயர் மணிகண்டன்.. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்களாம். இதில், மகன் 5-ம் வகுப்பு படிக்கிறார்.. மகள் 2ம் வகுப்பு படிக்கிறாராம்.
பாண்டவையாறு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால், இதுபோல பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.. இத்தனை காலம் வெறும் பிரச்சனையாக மட்டுமே இருந்துவந்த நிலையில், தற்போது ஒரு கொலையே நடக்கும் அளவுக்கு மதுபோதை தலைதூக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அத்துடன் அந்த பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பெண்ணை கொடூரமாக கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
-
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications