50 ரூபா, லேஸ், குர்குரே சிப்ஸ் கொடுத்து கடத்த முயற்சி! தப்பியோடிய திருவாரூர் சிறுவன் பரபரப்பு புகார்
திருவாரூர்: திருவாரூரில் 6ஆம் வகுப்பு மாணவனை சில மர்ம நபர்கள் கடத்த முயற்சித்ததாக புகார் கூறியதை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூரில் 6ஆம் வகுப்பு மாணவன் பள்ளியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியில் இந்த கடத்தல் முயற்சி நடந்ததாக அந்த மாணவர் பெற்றோரிடம் கூறியதை அடுத்து அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அந்த மாணவர் கூறுகையில் நான் எனது பிரண்டுடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். அப்போது வழக்கமாக இறங்கி வீட்டிற்கு நடந்து செல்லும் இடத்தில் நான் இறங்கிக் கொண்டேன். அப்போது இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
என்னிடம் முகவரி கேட்பது போல் கேட்டு என்னை வண்டியில் ஏறுமாறு மிரட்டினர். உடனே நான் ஏறமாட்டேன் என்றேன். இதையடுத்து என்னை மிரட்டி பின்னால் வந்த காரில் உட்கார வைத்தனர். கார் சிறிது தூரம் சென்ற போது காரில் இருந்தவர்கள் எனக்கு 50 ரூபாய் நோட்டையும் லேஸ் சிப்ஸ், குர்குரேவையும் கொடுத்தனர்.
நான் 50 ரூபாய் நோட்டை அவர்களிடமே திருப்பி கொடுத்தேன். அப்போது சிக்னல் வந்தது. கார் நின்றது. அந்த நோட்டை அவர்கள் வாங்கும் போது கீழே விட்டுவிட்டார்கள். கீழே குனிந்து எடுக்க முயன்ற போதுதான் நான் காரை விட்டு இறங்கி ஓடி வந்தேன். அப்படியும் அவர்கள் என்னை பிடிக்க துரத்திக் கொண்டே வந்தார்கள்.
மக்கள் நடமாட்டம் இருந்த பகுதிக்கு நான் ஓடி வந்ததால் அவர்கள் என்னை துரத்தாமல் திரும்பி சென்றுவிட்டனர். உடனே வீட்டிற்கு ஓடி வந்து என் அம்மாவிடம் விஷயத்தை கூறினேன். அவர் போலீஸில் புகார் கொடுக்கலாம் என என்னை அழைத்து வந்தார். இவ்வாறு சிறுவன் தெரிவித்திருந்தார்.
சிறுவன் கூறுவதை வைத்து கடத்த முயற்சிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். அண்மைக்காலமாக குழந்தை கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் பெருகுகின்றன. அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை கடத்தல் என சென்னையில் ஒரு வதந்தி பரவியதையும் போலீஸார் தெரிவித்திருந்தனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications