திருவாரூர் விஏஓ ஆபீசில் திருதிருன்னு விழித்த அரசு ஊழியர்.. வாரிசு சான்றிதழ் கேட்டால்? எல்லாம் போச்சா
திருவாரூர்: தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றன. அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கைதாகி வருகிறார்கள். சிறை சென்ற நபர்களுக்கு உடனுக்குடன் தண்டனைகளும், தரப்பட்டு வருகின்றன. அந்தவகையில், திருவாரூர் விஏஓ லஞ்சம் வாங்கி கைதாகி சிறை சென்றார்.. அவருக்கும் தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் கவனித்தபடி உள்ளனர்.
தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. இங்குதான் அதிக அளவில் பணப்புழக்கம் உள்ளது.. சாதி சான்றிதழ் கேட்டு சென்றால் லஞ்சம், பட்டா கோரினால் லஞ்சம், நிலத்தை அளக்க சொன்னால் லஞ்சம், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தால் லஞ்சம் என அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை லஞ்சம் கேட்பது பெருகி கொண்டே வருகிறது.

திருவாரூர் அரசு ஊழியர்
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கி, பொதுவெளியில் கைதானாலும், கைது நடவடிக்கைகள் தொடர்ந்தவாறே உள்ளது. இதோ திருவாரூரில் ஒரு அரசு ஊழியருக்கு சரியான தண்டனை தரப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியை சேர்ந்தவர் அருள்தரன். இவர் வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக 2015ம் ஆண்டில் புலிவலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது, விஏஓ -வின் உதவியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வந்திருக்கிறார்.. திருவாரூர் வடகரை ஊராட்சி தென்கரை பகுதியை சேர்ந்தவர் இந்த பழனிவேல்..
2 ஆயிரம் கேட்ட உதவியாளர்
அருள்தரன் வாரிசு சான்றிதழ் கேட்டதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால், அருள்தரன் ரூ.500-ஐ அட்வான்ஸாக பழனிவேலிடம் கொடுத்துள்ளார். மிச்ச பணத்தை மறுநாள் தருவதாக சொல்லியுள்ளார்.

ஆனால், எதற்காக லஞ்சம் தர வேண்டும்? என்று நினைத்த அருள்தரன், இதுகுறித்து திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அவர்கள் தந்த யோசனைப்படி, மறுநாள் ரசாயனம் தடவிய ரூ.1,500 லஞ்ச பணத்தை பழனிவேலிடம் அருள்தரன் வழங்கியிருக்கிறார்.. அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பழனிவேலை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அதிரடி உத்தரவு தந்த நீதிபதி
இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருவாரூர் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்சம் வாங்கிய பழனிவேலுக்கு 4 வருடங்கள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவானது, வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் மிகுந்த அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications