திருவாரூர் டூ சென்னை.. பறந்து வந்த இதயம்.. இறந்தும் "கடவுளாக வாழும்" மயிலாடுதுறை ஐயப்பன்!
திருவாரூர்: மயிலாடுதுறை மாவட்டம் திருவாரூரில் விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், நல்லத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஐயப்பன். இவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதையடுத்து இவர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்படி அவரது இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.
குத்துனதே நண்பன் தான்! கொலையை தற்கொலையாக்க போட்ட நாடகம்! ஆனால்.. காரணமே வேறயாம்! மலைத்த மயிலாடுதுறை!

அமைந்தகரை
அவை அனைத்தும் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு 3 மணி நேரத்தில் கொண்டு செல்லப்பட்டது. திருவாரூரில் இருந்து மன்னார்குடி- தஞ்சை வழியே திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து 10 மணிக்கு விமானத்தில் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.

எம்ஜிஎம் மருத்துவமனை
பின்னர் அங்கிருந்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஐயப்பனின் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கும் கல்லீரல் மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டது.

ஐயப்பனின் இரு கண்கள்
அது போல் ஐயப்பனின் இரு கண்களும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. உடல் உறுப்புகளை தானம் செய்வதால் பல உயிர்கள் காப்பாற்றப்படுவது குறித்து தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தோரின் குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வருகிறார்கள்.

தானத்தில் சிறந்தது அன்னதானம்
தானத்தில் சிறந்தது அன்னதானம், ரத்ததானம், உறுப்புதானம் என காலத்திற்கேற்ப சொல்லப்படுகிறது. அது போல் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பிற துறை பிரபலங்கள் என உறுப்பு தானத்தின் அவசியத்தை விளக்குகிறார்கள். இதனால் இன்ஸ்பயராகும் மக்கள் உடனடியாக தங்கள் உறுப்பு தானம் குறித்து பதிவு செய்து வைக்கிறார்கள். இறந்தவுடன் மண்ணிலோ தீயிலோ பயனற்று போகும் உடல் உறுப்புகளை 4 பேரின் உயிரை காப்பாற்ற கொடுப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.