மன்னார்குடியில் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தை பேனராக வைத்த தவெகவினர்.. அதிரடியாக அகற்றிய போலீசார்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாவிகள், அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக விஜய் எழுதிய கடித நகலை பிளெக்ஸ் போர்டாக அடித்து மூன்று இடங்களில் வைத்தனர். இந்த பேனர் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அவற்றை அகற்றுமாறு போலீசார் உத்தரவிட்டனர். இதையடுத்து, பேனர்களை தவெக நிர்வாகிகள் அவிழ்த்து சென்றனர்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளுக்கு விஜய் கைப்பட கடிதம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினியரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாணவிகளுக்கு தனது கைப்பட கடிதம் எழுதியிருந்தார்.
அதில், "கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
கடிதத்தையே பேனராக வைத்த நிர்வாகிகள்
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்" என்று கூறியிருந்தார். விஜய் எழுதிய இந்த கடிதம் நேற்று சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக தவெவினரால் பகிரப்பட்டது. அதேபோல, சென்னையிலும் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரமாக தவெகவினர் வழங்கினர்.
அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக தவெகவினரை போலீசார் கைது செய்து சில மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர். இதற்கிடையே விஜய் எழுதிய கடித நகலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் மன்னார்குடி நகர ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேருந்து நிலையம், கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் பிளக்ஸ் பேனர்களாக அச்சிட்டு வைத்திருந்தனர்.
பேனர்களை அகற்றிய போலீசார்
இதனை அறிந்த மன்னார்குடி நகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உரிய அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி அகற்றக் கூறினர். தவெகவினரை அழைத்தே அந்த பிளெக்ஸ் பேனர்களை அவிழ்க்க வைத்தனர். முன்னதாக அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநர் ரவியை தவெக விஜய் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக மோசம் அடைந்து வருவதாகவும், அதன் சமீபத்திய வெளிப்பாடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் தாக்குதல் சம்பவத்தையும் குறிப்பிட்டு இவை தொடர்பாக ஆளுநர் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம்












Click it and Unblock the Notifications