மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி!
திருவாரூர்: அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியிலும் டிஆர்பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி உறுதி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தின்போதே உத்தரவாதம் அளித்துள்ளார். மன்னார்குடியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், கூட்டத்தில் கோரஸாக வந்த குரலுக்கு பதில் கொடுத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக, சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டிஆர்பி ராஜாவை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை மன்னார்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். பெரியார் சிலை அருகே வாக்கு சேகரித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கஜா புயல், கொரோனா காலகட்டத்தில் மக்களோடு, மக்களாக பணியாற்றியவர் டிஆர்பி ராஜா.
தொழில் வளர்ச்சியில், இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உயர்ந்ததற்கு டிஆர்பி ராஜாவின் முயற்சி தான் காரணம். தமிழகம் முழுக்க தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர். அவருக்கு போடும் ஓட்டு அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு போடும் வளர்ச்சிக்கான ஓட்டு. எனவே, டிஆர்பி ராஜாவை இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
மன்னார்குடி தொகுதியில், திமுகவுக்கு எதிராக, ஒட்டுமொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதிமுக பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் நான்கு முழம் கயிற்றில் தொங்கி விடுவேன் என்றார் ஒருவர், எடப்பாடி பழனிசாமியை டயர் நக்கி என விமர்சனம் செய்தவர் மற்றொருவர். தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவை கைப்பற்றுவதற்காகவே கூட்டணி அமைத்துள்ளனர். இப்படிப்பட்ட துரோக கூட்டம் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த தேர்தல் தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான தேர்தல் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். டெல்லி அணிக்கு மோடிதான் தலைவராக உள்ளார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை ஜெயலலிதாவின் கால்களை பிடித்தார், அதன் பின்னர் சசிகலா, தினகரன் காலை பிடித்தார். தற்சமயம் மோடியின் கால்களை பிடித்துக் கொண்டிருக்கிறார். இதைத்தான் நான் முரட்டு அடிமை என்று கூறுகிறேன்.
இப்படிச் சொன்னதற்கு எனக்கு அனுபவம் இல்லை என்று பழனிசாமி கூறுகிறார். உண்மையில் எனக்கு இதுபோன்று அடிமையாக இருந்த அனுபவம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். காலில் விழுவது தவறில்லை. ஆனால், சசிகலாவின் காலையே வாரிவிட்டார். இதைத்தான் நான் கூறி வருகிறேன். தற்போது சசிகலாவும் நேரடியாக களத்துக்கு வந்து இது தொடர்பாக கேள்வி கேட்கிறார். நான் சொன்னது சரிதானே என்றும் கூறுகிறார். இந்த தேர்தலில் சங்கி கூட்டம் வெற்றி பெறக்கூடாது. அவ்வாறு வெற்றிபெற்றால் நமது உரிமைகள் அனைத்தும் பறிபோய்விடும்." எனப் பேசினார்.
'நீங்கள் டிஆர்பி ராஜா என்கின்ற தனிப்பட்ட எம்எல்ஏவுக்கு வாக்களிக்கவில்லை, நீங்கள் வாக்களிக்கப்போவது யாருக்கு?' என உதயநிதி கூறியபோது கீழே இருந்த தொண்டர்கள் 'அமைச்சருக்கு' என கோரஸாக குரல் எழுப்பினர். இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நீங்கள் நினைப்பதைப் போல் மீண்டும் வருகின்ற ஆட்சியில் டிஆர்பி ராஜா அமைச்சராக வருவார், அப்போது அவர் மன்னார்குடிக்காக கொடுத்துள்ள அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் எனத் தெரிவித்தார்.
-
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
Mylapore: அக்கா தமிழிசையை ஆளுநராக்குவோம்! இது சட்டசபை தேர்தல்தானே! உதயநிதி ஏன் இப்படி சொல்கிறார்? -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
பிராமண எதிர்ப்பு காலாவதியாகிவிட்டதா? - தவெக பொருளாளர் சொல்வது சரியா? -
கோவை தெற்கில் படையெடுக்கும் கரூர் டீம்.. திணறடிக்கும் செந்தில் பாலாஜி.. அலறும் அதிமுக -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
செந்தில் பாலாஜின்னா தனி ரகம்! 200000 ஓட்டுக்காக வேலுமணி தந்த ஸ்டார் ஓட்டல் ட்ரீட்.. உடனே ட்விஸ்ட் -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்!












Click it and Unblock the Notifications