ஆழித்தேரை ஓட்டியவர் கலைஞர்.. தமிழக தேரை முடக்கியவர் முதல்வர் ஸ்டாலின்.. விஜய் ஆவேசப் பேச்சு
திருவாரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாவது வாரமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். திருவாரூர் பகுதியில் பேசிய விஜய், நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாட்டின் தேரை 4 பக்கமும் கட்டையைப் போட்டு ஓடவிடாமல் முடக்கிவிட்டார் முதல்வர் ஸ்டாலின் என்று விஜய் ஆவேசமாகப் பேசினார்.
விஜய் பிரச்சாரம்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளார். 20க்கும் மேற்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுடன் காவல் துறை இந்தப் பிரச்சாரத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளித்திருந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வந்த விஜய்க்கு சாலை மார்க்கமாக நாகை சென்றார்.

உற்சாக வரவேற்பு
அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து புத்தூர் பகுதியில் பிரச்சாரத்தை முடித்த அவர் திருவாரூருக்கு வந்தடைந்தார். ஏராளமான ரசிகர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவாரூரில் பச்சைத் துண்டு அணிந்து பேச்சைத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய்.
திருவாரூர் தேர்
அவர் பேசுகையில், திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோயில், ஆழித்தேர்தான் மனதிற்கு நியாபகத்தில் வரும். திருவாரூர் தேர் என்றால் சும்மாவாங்க. திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம். நீண்ட நாட்களாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என்று மார்தட்டி சொல்லிக் கொண்டவர் யாரென்று எல்லோருக்கும் தெரியும்.
தமிழக தேரை முடக்கிய சிஎம்
ஆனால், அவருடைய மகன் மாண்புமிகு சிஎம் நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்கிற தேரை 4 புறமும் கட்டையைப் போட்டு அசையாமல் ஆடாமல் அப்படியே முடக்கிவிட்டார். திருவாரூர் கருவாடாக காய்கிறது, முதல்வர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை சாலை வசதி கூட சரியாக இல்லை. நாகப்பட்டினம் மாதிரி திருவாரூர் குடிசைப் பகுதிகள் நிறைந்த பகுதியாக உள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் பல துறைகள் இல்லை இங்கு உள்ள மருத்துவக் கல்லூரிக்கே மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளது. இங்கு இருக்கும் எக்யூப்மென்டுகள் சரியாக வேலை செய்யாதே. தேசிய நெடுஞ்சாலைக்கு சரியான சாலை இருக்காதே. டெல்டா விவசாயிகள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
விவசாயிகளின் குமுறல்
டெல்டா விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பறிக்கிறார்கள். இதை வேறு யாராவது சொல்லி இருந்தால் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இதை என்னிடம் சொன்னதே விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். சிஎம் சார் உங்களுக்கு வேண்டுமென்றால் 40க்கு 40 என்றால் அது தேர்தல் ரிசல்ட்டாக இருக்கலாம். டெல்டா பகுதி மக்களைப் பொறுத்தவரை 40க்கு 40 என்றால் நீங்கள் அவர்கள் வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷன் என்று கூறினார்.
-
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி! -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக











Click it and Unblock the Notifications