திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கால் வைத்ததும் தொடங்கிய கொடுமை.. குவைத்தில் தமிழர் கொலை.. உண்மையில் நடந்தது என்ன? பின்னணியில் "பெண்"

Google Oneindia Tamil News

திருவாரூர்: குவைத்தில் கொலை செய்யப்பட்ட தமிழரின் உடல் இன்று அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது.

திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இவர் அங்கு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒட்டகம் மேய்த்து வந்த அவரை, அவரின் முதலாளி சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

குவைத்தில் ஏமாற்றப்பட்ட அவர்.. அங்கு சென்ற முதல் நாளில் இருந்து மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பாலைவனத்தில் படுக்கை.. சோறு தண்ணீர் இல்லை.. குவைத்தில் தமிழக இளைஞருக்கு டார்ச்சர்.. மனைவி கண்ணீர் பாலைவனத்தில் படுக்கை.. சோறு தண்ணீர் இல்லை.. குவைத்தில் தமிழக இளைஞருக்கு டார்ச்சர்.. மனைவி கண்ணீர்

முத்துக்குமரன்

முத்துக்குமரன்

இவருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். முத்துக்குமரன் ஊரில் மளிகை கடை நடத்தி வந்து நன்றாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் கொரோனா காலத்தில் மளிகை கடையில் பெரிய அளவில் 'நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த நஷ்டம் காரணமாக பொருளாதார ரீதியாக அவர் கடுமையாக சிரமப்பட்டு உள்ளார். இதன் காரணமாக சில இடங்களில் இவர் கடனும் வாங்கி உள்ளார். இந்த கடனை அடைக்கவே அவர் குவைத் சென்றுள்ளார்.

குவைத்

குவைத்

இதற்காக தமிழ்நாட்டில் சில ஏஜெண்ட்டுகளை அணுகி வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஏஜெண்ட் மூலம் குவைத்துக்கு சென்றுள்ளார். குவைத்தில் மெடிக்கல் கடை ஒன்றில் வேலை பார்க்க வேண்டும். அந்த கடைக்கு அவ்வப்போது ஓட்டுனராகவும் இருக்க வேண்டும் என்றுதான் இவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை நம்பித்தான் அவரும் வேலைக்கு சேர்ந்துள்ளார். நம்பிக்கையான இடம், தாராளமாக செல்லலாம் என்று ஏஜெண்ட்டும் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

ஏஜெண்ட்

ஏஜெண்ட்

அவர் குவைத்தில் கால் வைத்து 30 நிமிடத்தில் காரில் ஒரு இடத்திற்கு கூட்டி செல்லப்பட்டு உள்ளார். கார் 2 மணி நேரம் பயணித்து பாலைவனம் ஒன்றுக்கு சென்றுள்ளது. அங்கே இறக்கிவிடப்பட்ட இவரிடம் ஒட்டகம் மேய்க்க சொல்லி உள்ளனர். அங்கே இறக்கிவிடப்பட்ட சில நிமிடத்தில் இவரை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர். சரியாக தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். மோசமாக தாக்கியும் உள்ளனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதையடுத்து முத்துக்குமரன் உடனே தனது வீட்டிற்கு போன் செய்து சொல்லி இருக்கிறார். குடும்பத்தினர் இதை பற்றி ஏஜெண்டிடம் பேசி உள்ளனர். ஆனால் ஏஜெண்ட்.. போனவர்.. போனவர்தான். உடனே எல்லாம் திருப்பி கொண்டு வர முடியாது. ஒப்பந்தம் முடியும் வரை அங்குதான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அவர்களின் குடும்பம் திட்டமிட்டது. ஆனால் அதற்கு இடையில் முத்துக்குமரன் அங்கு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 உடல்

உடல்

குவைத்தில் கொலை செய்யப்பட்ட தமிழரின் உடல் இன்று அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார்.இந்த நிலையில் கடந்த 8ம் தேதி இவர் அங்கு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஒட்டகம் மேய்த்து வந்த அவரை, அவரின் முதலாளி சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. குவைத்தில் ஏமாற்றப்பட்ட அவர்.. அங்கு சென்ற முதல் நாளில் இருந்து மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

English summary
Who was the agent responsible for the Tamilian death in Kuwait? What did really happen to the Tamil Nadu man who killed in Kuwait by the owner?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X