நெல்லை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு -ஹவுஸ் சர்ஜன்கள் ஸ்டிரைக் வாபஸ் ..
நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் கடந்த நான்கு நாட்களாக நடத்தி வந்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தை காரணமாக பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் டீன் கூறுகையில்,அரசு மருத்துவமனையில் 10 தனியார் பாதுகாவலர்களை ஞாயிற்று கிழமை முதல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை இன்று முதல் 20 ஆக உயர்த்தப்படுகிறது. இவர்கள் இரண்டு ஷிப்டாக பணியாற்றுவார்கள்.
வாளகத்தில் உள்ள ஐகிரவுண்ட் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இன்னும் ஒரு வாரத்திற்குள் கூடுதலாக முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். 1ம் தேதி முதல் பார்வையாளர் நேரம் அமல்படு்தப்படும்.
பார்வையாளர்களுக்கு கேட் பாஸ் வழங்கி குறிப்பிட்ட நேரம் மட்டும் நோயாளிகளை சந்தித்து திரும்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.
டாக்டர்கள் நர்ஸ்கள், பயி்ற்சி டாக்டர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படும். தனியார் வாகனங்கள் உள்ளே வந்தவுடன் நோயாளிகளை இறக்கி விட்டு உடனே வெளியேறி விடவும், பிற வாகனங்களை கட்டுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
எல்லாவற்றுக்கும் மேலாக டாக்டர்கள் இடையூறு இன்றி மருத்துவ சேவை செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நோயாளிகளை பார்க்க கூட்டமாக வர கூடாது. இதனால் பல நோயாளிகளுக்கு சிகிச்சை பணி பாதிக்கப்படுகிறது. இடையூறு ஏற்படுகிறது.
எனவே மருத்துவமனை நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications