திருப்பூரில் கோர விபத்து.. மூவர் பலி! சிதறி கிடந்த உடல்கள் - உருக்குலைந்த கார்! சிதைந்த பேருந்து
திருப்பூர்: தனியார் பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி ஐந்து பேர் காரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தனர்.
அந்த கார் கொடுவாய் காக்காபள்ளம் என்ற இடத்தில் வந்த போது திடீரென ஓட்டுநனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது.

விபத்தில் மூவர் பலி
அந்த சமயம் திருப்பூரில் இருந்து பழனி நோக்கி காருக்கு எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து அதிவேகமாக மோதியது. காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டபோது பெரும் சத்தம் ஏற்பட்டு உள்ளது. இதனை கேட்டு அருகில் இருந்த மக்கள், ஓடோடி வந்து பார்த்தபோது காரில் பயணித்த ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்தனர்.

2 பேர் படுகாயம்
2 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், படுகாயமடைந்த மகேஷ் மற்றும் கிஷோர் ஆகியோரை திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை
விபத்தில் உயிரிழந்த வீரக்குமார், முருகேசன் மற்றும் சஜித் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. விபத்து குறித்து ஊதியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்குள்ளான பேருந்தின் முன் பக்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

கோர விபத்து
அதேபோல் கார் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களின் உதிரி பாகங்கள் ஆங்காங்கே சாலையில் சிதறிக்கிடந்தன. காரில் பயணித்தவர்களும் விபத்து ஏற்பட்டவுடன் தூக்கி வீசப்பட்டு சாலையில் கிடந்தனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் காண்போரை பதைபதைக்க செய்துள்ளன.












Click it and Unblock the Notifications