படுபயங்கரம்.. கழுத்து அறுத்து 8 வயது சிறுவன் கொலை.. ஹாஸ்டல் பாத்ரூமில் நடந்த கொடூரம்!

8 வயது ஹாஸ்டல் மாணவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆந்திரா.. 8 வயது ஹாஸ்டல் மாணவன் கழுத்து அறுத்து கொலை-வீடியோ

    திருப்பதி: 8 வயசு பையனை ஹாஸ்டல் பாத்ரூமில் மிகக் கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்றவர்கள் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் சல்லப்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தாசரி ஆதித்யா என்ற 8 வயசு மாணவன்.

    இவனும், இவனுடைய அண்ணனும் அங்குள்ள அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தனர்.தாசரி ஆதித்யா 3 ம் வகுப்பு படித்து வந்தான். அவன் அண்ணன் 4-ம் வகுப்பு படிக்கிறான். ரெண்டு பேருக்குமே ஹாஸ்டலில் ஒரே ரூம்தான்.. ஒன்றாகத்தான் தூங்குவார்கள்.

    தேடவில்லை

    தேடவில்லை

    இந்நிலையில், நேத்து ராத்திரி தாசரி ஆதித்யா ரூமுக்கு தூங்குவதற்கு வரவில்லை. இதனால் அண்ணனோ, ஒருவேளை பக்கத்து ரூமில் தம்பி தூங்கி கொண்டிருப்பான் என்று நினைத்து வேறு எங்கும் தேடாமல், தூங்கிவிட்டான்.

    அலறி ஓட்டம்

    அலறி ஓட்டம்

    இன்று காலை, மற்ற மாணவர்கள் குளிப்பதற்காக ஹாஸ்டல் பாத்ரூமுக்குள் சென்றனர். அப்போது, ஆதித்யா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அலறி அடித்து கொண்டு ஓடிவந்தனர். உடனடியாக ஹாஸ்டல் வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஆதித்யாவின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

    விசாரணை

    விசாரணை

    சிறிது நேரத்தில், ஹாஸ்டலுக்கு வந்த போலீசார் ஆதித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து, ஹாஸ்டல் வார்டன் மற்றும் சில மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரபரப்பு

    பரபரப்பு

    8 வயசு பையனுடன் யாருக்கு என்ன விரோதம், எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. இருந்தாலும் மிக குரூரமாக நடந்துள்ள இந்த கொலை, நாட்டு மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+