Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் நிர்வாண படத்தில் நடித்தேனா.. சட்டசபையில் சிடி பிளே செய்து காட்டுறீங்க.. அமைச்சர் ரோஜா கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி, தன்னை தரம் தாழ்ந்த கருத்துகளால் விமர்சித்ததை அடுத்து உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளவர் ரோஜா. இவர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கிறார்கள்.

Actress Roja Selvamani shed tears in press meet saying she is being tortured by Telugu Desam party

சட்டசபையிலும் சிடிக்களை காட்டினார்கள். ஆனால் அந்த சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது.

அப்படியிருக்கும் போது என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி, பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது என கூறிய ரோஜா உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் அவர் தொடர்கையில் உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா?

முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, நர லோகேஷ் ஆகியோர் பண்டாருவை கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சுக்கு அவருடைய மனைவி அவரை பளார் என அறைந்திருக்க வேண்டும்.

நர லோகேஷ் வெட்கமே இல்லாமல் ட்வீட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தது ஏன், நான் நிர்வாண படத்தில் நடித்தவள் என்றால் என்னை ஏன் சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்த்தார். உங்கள் கட்சியில் இருக்கும் போது நான் நல்லவராகவும் வேறு கட்சிக்கு சென்றால் நான் எப்படி கெட்டவராகவும் இருக்க முடியும்?

நான் சினிமாவில் நடித்ததால் என்னை என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? உங்களை போன்றோர் இப்படி எல்லாம் பெண்களை அவதூறாக பேசினால் அரசியலில் பெண்கள் எப்படி முன்னேறுவார்கள், எப்படி அரசியலுக்கு வருவார்கள்? பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது.

கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள். தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை, அக்கட்சியால் அரசியல் ரீதியில் வளரவே முடியாது. பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என ரோஜா தெரிவித்தார்.

அமைச்சர் ரோஜா அழுதபடியே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ரோஜா குறித்து அவதூறு பேசியதாக போலீஸார் பண்டாரு மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 1990 களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரோஜா ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தெலுங்கு தேசம் கட்சியில்இணைந்தார்.

2004 ஆம் ஆண்டு சந்திரபாபுவின் சொந்த தொகுதியான சித்தூரில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா தோல்வி அடைந்தார். இதையடுத்து 2009ஆம் ஆண்டு ரோஜாவுக்கு சந்திரகிரி தொகுதி ஒதுக்கப்பட்டது. எனினும் ரோஜா தோல்வி அடைந்தார். சொந்த கட்சியினர் மாற்று கட்சிக்கு விசுவாசமாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கட்சியில் அவருக்கான மவுசு குறைந்தது. பின்னர் கட்சியிலிருந்தே ஒதுக்கப்பட்டார். பாலின பாகுபாடு, அவமானங்கள், துன்பங்கள் உள்ளிட்டவற்றை அந்த கட்சியில் கண்ட ரோஜா, ஒரு கட்டத்தில் அவரை யாருமே ஒரு பொருட்டாக மதிக்காத நிலைக்கு தள்ளப்பட்டார். பல நாட்கள் இரவு நேர தூக்கம் கெட்டு, கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

பின்னர் தனது திறமையை உணர்ந்த ரோஜா ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தேர்தல் வந்தது, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார், விட்டதை பிடித்தார். புதிய கட்சியில் ஸ்டார் பேச்சாளரானார். அந்த தேர்தலில் தன்னை அவமானப்படுத்திய சந்திரபாபு நாயுடுவை பற்றி கிழி கிழியென கிழித்தார்.

முதல் முறையாக மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்டார். நகரி தொகுதியில் மக்களுக்காக பல பணிகளை செய்தார். தமிழகத்தின் அம்மா உணவகத்தை போன்று அங்கு ஒய்.எஸ்.ஆர். அண்ணா உணவகம் என்ற ஒன்றை தொடங்கி தினமும் ஆயிரக்கணக்கானோர் பசியாற்றினார். டிவி ஷோக்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மக்கள் பணியாற்றினார்.

15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ரோஜாவுக்கு முதல் வெற்றி இந்த தேர்தல் என்றே சொல்லலாம். 2014 ஆம் ஆண்டு ஆந்திர சட்டசபையில் ரோஜாவின் உதவியுடன் எதிர்க்கட்சியாக நுழைந்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டு அதே நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா வென்றார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்தது தற்போது ரோஜா சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டியே மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+