பழைய வீட்டுக்கா?.. மகள்களின் நினைவுகள் வாட்டுமே.. நரபலி கொடுத்த ஆந்திரா தம்பதி கண்ணீர்!
திருப்பதி: இனி வீட்டுக்குச் சென்றால் மகள்களின் நினைவுகள் வாட்டுமே என ஆந்திராவில் மகள்களை நரபலி கொடுத்த தம்பதி மனநல ஆலோசனைக்கு பிறகு கண்ணீர் விட்டனர். மேலும் அவர்களுக்கு ஜாமீனும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பெற்றோர்களால் அகல்யா, சாய் திவ்யா ஆகிய இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர். பெற்றோர் இருவரும் நன்கு படித்தவர்கள்.

நரபலி
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பெற்ற தாயான பத்மஜாவும் இரண்டாவது குற்றவாளியாக தந்தை புருஷோத்தம் நாயுடுவும் கைது செய்யப்பட்டனர். மகள்களை நரபலி கொடுத்தால் தங்கள் அதீத சக்தி கிடைக்கும் என்றும் அந்த சக்தி மூலம் தங்கள் மகள்களுக்கு உயிர் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் நரபலி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்கள்.

திருப்பதி மருத்துவமனை
இதையடுத்து பெற்றோருக்கு திருப்பதி மருத்துவமனை மற்றும் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மதனப்பள்ளி கிளைச்சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

மகள்களின் நினைவுகள்
இந்த நிலையில் இருவருக்கும் நேற்று மாலை ஜாமீன் கிடைத்ததும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களது உறவினர்களின் காரில் ஏறி சென்றனர். ஏற்கெனவே வசித்து வந்த வீட்டுக்கு தம்பதி செல்லவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு மீண்டும் அதே வீட்டுக்கு சென்றால் மகள்களின் நினைவுகள் எங்களை வாட்டும்.

பாவம்
மூடநம்பிக்கையால் நாங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம். நாங்கள் செய்த பாவத்தை போக்க அன்னதானம் செய்தும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிகள் அளித்தும் எங்கள் காலத்தை கழிக்க போவதாக பத்மஜாவும் புருஷோத்தம் நாயுடுவும் தெரிவித்தனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications