பட்டுக்கு பதிலாக பாலியஸ்டர்? திருப்பதியில் வெடித்த சால்வை ஊழல் புகார்.. உண்மையில் என்ன நடந்தது?
திருப்பதி: உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோயிலில் கடந்தாண்டு தான் லட்டு சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. இதற்கிடையே இப்போது பட்டு சால்வை குறித்த ஊழல் சர்ச்சை வெடித்துள்ளது. பட்டு சால்வை எனச் சொல்லிவிட்டு பாலியஸ்டர் சால்வையை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதில் தேவஸ்தானத்திற்கு ₹54 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏழுமலையானைத் தரிசிக்க வருவார்கள். இதன் காரணமாக எப்போதுமே அங்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். நாள் கணக்கில் கூட காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

திருப்பதி
இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு அங்கு திருப்பதி லட்டு தொடர்பாகப் பிரச்சனை வெடித்தது. உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டிற்குக் கொள்முதல் செய்யப்பட்ட நெய் தொடர்பாகப் பிரச்சனை வெடித்திருந்தது. அது தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதற்கிடையே இப்போது அங்கு மற்றொரு பிரச்சனை வெடித்துள்ளது.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் பட்டு சால்வை கொள்முதலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் காரணமாகத் தேவஸ்தானத்திற்கு ₹54 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சால்வை ஊழல்
அதாவது கடந்த 2015 முதல் திருநாமம், சங்கு, சக்கரம் பொறித்த சால்வைகள் திருப்பதி கோயிலுக்காக வாங்கப்படுகிறது. இரு நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருந்தது. பட்டு சால்வை வாங்க இரு நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதில் ஒரு சால்வையின் விலை ரூ.1,389ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய விஐபிக்கள் மற்றும் ரூ.3,000 டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு இந்த சால்வை அணிவிக்கப்படும்.. அங்குள்ள ரங்க நாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் சால்வையை போர்த்தி ஆசீர்வாதம் செய்வார்கள்.
விசாரணை
இதற்கிடையே சால்வை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், அது தொடர்பாகச் சோதனை நடைபெற்றது. அதில் தேவஸ்தானத்துக்கு வழங்கப்பட்ட சால்வைகள் பட்டு மூலம் செய்யப்பட்டது இல்லை... பாலியஸ்டர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மத்தியப் பட்டு வாரியம் உட்பட இரு ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவை பாலியஸ்டர் என உறுதிப்படுத்தப்பட்டது. ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளதாக இந்த விசாரணையை ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாகத் தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்தார்.
லட்டு சர்ச்சை
திருப்பதியில் லட்டு சர்ச்சை கடந்த 2024 செப்டம்பரில் வெடித்தது. லட்டு செய்யத் தூய்மையான நெய் தான் எப்போதும் பயன்படுத்தப்படும். ஆனால், லட்டுகளில் செய்யப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருக்கலாம் என ரிப்போர்ட் வெளியானது. இது உலகெங்கும் உள்ள ஏழுமலையான் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வழக்கு இப்போது மேற்பார்வையின் கீழ் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல பரகாமணியிலும் (உண்டியல் பணம் எண்ணும் இடம்) முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. அதாவது அங்கு எழுத்தராக வேலை செய்த ரவிகுமார் என்ற ஊழியர் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தது. உலகெங்கும் இருந்து பக்தர்கள் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் நிலையில், வெளிநாட்டுப் பக்தர்கள் காணிக்கையாகப் போடும் வெளிநாட்டு கரன்சிகளை ரவிக்குமார் திருடியதாகக் கூறப்படுகிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications