சந்திர கிரகணம்.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் தரிசனம் ரத்து.. தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி திருமலை தேவஸ்தான கோவில்கள் நடை மூடப்படும் எனவும் பரிகார பூஜைகளுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பணக்கார கோவில் திருமலையில் அருள்பாலிக்கும் ஏழுமலையான் கோவில். இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வருகை தருகின்றனர். சேஷாத்திரி, நீலாத்திரி,கருடாத்திரி,அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றொரு திருநாமம் உள்ளது. திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

புரட்டாசி மாதம் தொடர் விடுமுறையால் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் காரணமாக நேரடியாக எந்தவித டோக்கன்களும் இல்லாமல் வரும் பக்தர்கள் வரிசை 10 கிலோ மீட்டர் வரை வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர். சாமி தரிசனத்திற்கு 42 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நாளையும் திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன இலவச நேர ஒதுக்கீடு டோக்கன்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தங்கள் யாத்திரையை அதற்கேற்ப திட்டமிடுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த ஆண்டின் கடைசி சூரிய மற்றும் சந்திர கிரகணம் அடுத்த மாதம் அக்டோபர் மாதம் நிகழ உள்ளது. அக்டோபர் 14 ஆம் தேதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 29 ஆம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும்.
ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணத்தையொட்டி 8 மணி நேரத்திற்கு மேல் மூடப்படுகிறது. அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலையில் நிலவும் பகுதி சந்திர கிரகணத்தால் 28ஆம் தேதி இரவு மூடப்பட்டு அக்டோபர் 29 அன்று மீண்டும் திறக்கப்படும். 29ஆம் ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடையும். எனவே 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையாம் கோயில் கதவுகள் மூடப்படும்.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம் என்பதால் 29ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவை நடைபெறும். எனவே சந்திர கிரகணத்தையொட்டி கோயில் கதவுகள் எட்டு மணி நேரம் மூடப்படும். இதன் காரணமாக 28 ஆம் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications