Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதியில் ரத்தாகும் விஐபி தரிசனம்? லட்டு சர்ச்சைக்கு நடுவே சந்திரபாபு நாயுடுவின் முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: லட்டு சர்ச்சைக்கு நடுவே திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் தொடர்பாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கோவில் நிர்வாகத்துக்கு முக்கிய அறிவுரையை வழங்கி உள்ளார். இதனால் விஐபி தரிசனம் ரத்தாகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் முந்தைய ஆட்சியில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பை கிளப்பினார். அதேபோல் லட்டுவில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயாபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று கலக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வக அறிக்கையையும் சந்திரபாபு நாயுடுவின் கட்சி வெளியிட்டது.

chandrababu naidu tirupati brahmotsavam

இது சர்ச்சையான நிலையில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சிறப்பு விசாரணை குழு விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் நேற்று மாலை 5.45 மணிக்கு தொடங்கியது. பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கொடி மரத்தில் கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவையொட்டி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு சேலையை தலையில் வைத்து சுமந்து சென்று சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தி ஏழுமலையானை வழிபட்டார்.

அதன்பிறகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று காலையில் அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராம்நாராயண ரெட்டி, திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் இஓ வீரய்யா சவுத்ரி மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பத்மாவதியில் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இந்த வேளையில் சந்திரபாபு நாயுடு பல்வேறு முக்கிய அறிவுரைகளை பிறப்பித்தார்.

திருப்பதி கோவிலின் புனிதம் பேணி காக்கப்பட வேண்டும். இந்த கோவிலில் ‛கோவிந்த நாமம்' மட்டுமே கேட்கப்பட வேண்டும். மலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் மலைப்பகுதியில் தற்போது காடு அடர்த்தி 72 சதவீதமாக உள்ளது. இதனை அடுத்த 5 ஆண்டுகளில் 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். அடர் வனப்பகுதியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். அடிக்கடி இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கோவிலில் சுவாமி தரிசனத்தில் விஐபி நடைமுறை பெரிய சிக்கலாக மாறி வருகிறது. விஐபிக்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மட்டும் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு அதிகம் செலவு செய்யக்கூடாது. முடிந்தவரை செலவை குறைப்பதோடு விஐபி தரிசன நடைமுறையை குறைக்க வேண்டும்.

கோவில் நிர்வாகத்தினர் அனைத்து பக்தர்களும் ஒன்று என கருத வேண்டும். குறிப்பாக தொலைதூரத்தில் இருந்து கோவிலுக்கு வருவோரிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் கோபமாக நடந்து கொள்ள கூடாது'' என கூறியுள்ளார். இதனால் திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் முறை படிப்படியாக குறைத்து ரத்தாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+