வேண்டுதலை நிறைவேற்று ஏழுமலையானே.. திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்ற முதல்வர் பழனிச்சாமி
திருப்பதி: திருப்பதி திருமலையில வெங்கடாச்சலபதியை தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்தியா முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தல் முடிந்த பின் திருப்பதி ஏழுமலையானை சென்று தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள். அந்த வகையில் அண்மையில் தமிழக துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் சென்றுவந்தனர்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது குடும்பத்தோடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் மூலம் திருப்பதி திருமலைககு புறப்பட்டு சென்றார்.
திங்கள் கிழமை மாலை திருமலை சென்றடைந்த முதல்வர் பழனிச்சாமியை திருப்பதி தேவஸ்தான துணைச் செயல் அலுவலர் பாலாஜி மலர்செண்டு வழங்கி வரவேற்று அழைத்துச் சென்றார்.
திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மாளிகையில் முதல்வர் பழனிச்சாமி இன்று இரவு தங்குகிறார். அத்துடன் இன்று இரவு வராக சுவாமி, ஹயக்ரீவர் கோவில்களில் வழிபாடு செய்யும் முதல்வர், நாளை (செவ்வாய்கிழமை) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications