திருப்பதி லட்டுக்கு திண்டுக்கல் நெய்.. நாயுடு பக்கம் லாவகமாக பந்தை திருப்பிய ஜெகன்.. பவனுக்கும் அடி
திருப்பதி: திருப்பதி லட்டுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டைரி நிறுவன நெய் வழங்கப்பட்டது. அந்த நெய் தரம் குறைந்ததாக இருந்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் மாட்டுக்கொழுப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. புதிதாக முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு, ஆரம்பத்தில் இதனை ஜெகனுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த நினைத்தார். பவன் கல்யாண் புனிதமே போய்விட்டது என்று ஒரே அடியாக தெருவில் இறங்கி போராடினார். இதனால் தர்ம சங்கடத்தில் நாயுடு அப்போது சிக்கிக்கொண்டார். இந்நிலையில் திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் புள்ளி விவரத்துடன சந்திரபாபு நாயுடு பக்கம் லாகமாக பந்தை திருப்பி உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
திருப்பதி லட்டுக்கு திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டைரி நிறுவன நெய் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்தது.இந்த நெய் தரம் குறைந்ததாக இருப்பதாக குற்றச்சாட்டு ஆந்திராவில் எழுந்தது. சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற தருணத்தில் இந்த சம்பவம் நடந்தததால், ஜெகன் மோகன் ரெட்டி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெலுங்கு தேசம் எழுப்பியது. அப்போது துணை முதல்வராக பதவியேற்ற பவன் கல்யாணும் தன் பங்குகிற்கு திருப்பதி லட்டு பிரசாதம் விவகாரத்தில் போராட்டத்தில் குதித்தார்.

பவன் கல்யாண் உருவாக்கிய பிரச்சனை
பவன் கல்யாண் குதிக்காத வரை வெறும் அரசியல் குற்றச்சாட்டு, ஜெகன் சந்திரபாபு நாயுடு மோதலாக மட்டுமே இருந்தது. ஆனால் பவன் உள்ளே வந்து , திருப்பதியின் புனிதமே போய்விட்டது.. பிராய்சித்தம் தேட வேண்டும் என்று சனாதனம் உள்ளிட்ட விவாகரங்களை பேசியதால், மொத்த இந்தியாவும் அரசியலை கடந்து மதவிவகாரமாக பார்த்தது. திருப்பதியில் கவனம் வைத்தது. மாட்டுக்கொழுப்பு திருப்பதி பிரச்சாரத்தில் இருப்பதாக தகவல்கள் பரவியதால் மக்கள் கொதித்து போனார்கள்.
நாயுடுவுக்கு தர்ம சங்கடம்
எல்லா பிரச்சனைகளையும் ஜெகன் மோகன் ரெட்டி பக்கம் ஆரம்பத்தில் வந்த நிலையில், மாட்டுக்கொழுப்பு என்று பரவிய தகவலால், ஆந்திர அரசுக்கும் சிக்கலாக அப்போதே மாறியது. ஒருவழியாக மாட்டுக்கொழுப்பு இல்லை.. தரமற்ற ஆயில் தான் என்று உறுதியானது. அதேநேரம் திருப்பதி விவகாரத்தில் பவன் கல்யாண் செய்த அரசியலை நாயுடு ரசிக்கவில்லை. மாறாக தர்ம சங்கடத்திற்கு அப்போது உள்ளதாக பரவலாக ஆந்திராவில் பேசப்பட்டது.
அடித்து ஆடிய ஜெகன்
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் தற்காப்பு ஆட்டம் ஆடி வந்த நிலையில், இப்போது அட்டாக் செய்யத் தொடங்கிவிட்டார். லட்டு விவகாரத்தில் மக்கள் உணர்வுபூர்வமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், "இந்தக் குழப்பங்கள் அனைத்தும் உங்கள் கண்முன்னே, உங்கள் ஆட்சியில்தானே நடந்தது?" என்று கேட்பதன் மூலம் சந்திரபாபு நாயுடுவின் நிர்வாகத் திறமையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளார்.
இதுவரை ஒரு தற்காப்பு நிலையில் இருந்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, இப்போது தரவுகளை வைத்துப் பேசி சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி நேற்று வைத்த வாதங்களை பார்ப்போம்..
டெண்டர் எப்படி
டெண்டர் மற்றும் ஆர்டர்: தேர்தல் முடிந்து (மே 13), முடிவுகள் வருவதற்கு முன்னரே (ஜூன் 4) 'ஏர் டைரி ( திண்டுக்கல்)' நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்கப்பட்டிருக்கிறது.
சப்ளை மற்றும் சோதனை: நெய் விநியோகம் செய்யப்பட்டது மற்றும் அதில் சில டேங்கர்கள் தரக்கட்டுப்பாட்டில் தோல்வியடைந்தது எல்லாமே சந்திரபாபு நாயுடு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகுதான் (ஜூன் 12-க்கு பின்) நடந்துள்ளது.
ஜெகனின் கேள்வி இதுதான்
"ஆர்டர் கொடுத்தது முதல், நெய் வந்தது, சோதனை செய்தது, அது பெயிலானது, பிறகு அந்த டேங்கர்கள் திருப்பி அனுப்பப்பட்டு மீண்டும் ரகசியமாகக் கொண்டு வரப்பட்டது என அனைத்தும் உங்கள் ஆட்சியில் நடக்கும்போது, இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு என்ன சம்பந்தம்?" என்பதுதான் அவர் எழுப்பும் கேள்வி.
தெலுங்கு தேசம் சொல்வது என்ன
இதற்குப் பதில் சொல்லும் தெலுங்கு தேசம் கட்சி, நெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விதிகள் மற்றும் அந்த நிறுவனத்தைத் தேர்வு செய்ததற்கான அடிப்படை நடைமுறைகள் ஜெகன் ஆட்சிக்காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்டன. ந்தைய ஆட்சியில் தரம் குறைந்த நெய்யை வாங்குவதற்கு ஏற்றவாறு டெண்டர் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால்தான், இவ்வளவு மலிவான விலைக்கு (சுமார் ₹320) நெய் சப்ளை செய்ய முடிந்தது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
உங்கள் ஆட்சி தானே
லட்டு விவகாரத்தில் மக்கள் உணர்வுபூர்வமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், "இந்தக் குழப்பங்கள் அனைத்தும் உங்கள் கண்முன்னே, உங்கள் ஆட்சியில்தானே நடந்தது?" என்று கேட்பதன் மூலம் சந்திரபாபு நாயுடுவின் நிர்வாகத் திறமையைக் கேள்வி எழுப்பி உள்ளார். ஒரு தற்காப்பு நிலையில் இருந்த ஜெகன், இப்போது தரவுகளை வைத்துப் பேசுவது சந்திரபாபு நாயுடு அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்திதாக அங்குள்ள அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நாயுடு பக்கம் பந்து
அதேநேரம் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதைத் தாண்டி, இந்த விவகாரம் இப்போது "யார் ஆட்சியில் தவறு தொடங்கியது?" என்பதிலிருந்து "யார் ஆட்சியில் இந்தத் தரமற்ற நெய் உள்ளே வந்தது?" என்ற இடத்திற்கு நகர்ந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி மிகச் சரியாக டைம்லைனைப் பயன்படுத்திப் பந்தை நாயுடு பக்கம் திருப்பி உள்ளதாக ஆந்திர அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications