திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வு: 10 நாட்களில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா?
திருப்பதி: திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வைகுண்ட ஏகாதசி கடந்த 10ஆம் தேதி அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் கடந்த 10 நாட்களாக இந்த நிகழ்வு நடந்தது.

அதாவது கடந்த 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடந்தது. இந்த 10 நாட்களுக்கு 1.40 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தலா ரூ 300-க்கு விற்பனை செய்யப்பட்டன. அத்துடன் இலவச தரிசனத்திற்கு வரிசையில் நிற்காமல் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இதை தவிர நடைபாதையில் வர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தவிர்த்து எந்த ஆர்ஜித சேவைகளும் இந்த 10 நாட்களில் வைக்கப்படவில்லை. அது போல் விஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த 10 நாட்களுக்கு 6.83 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 1.83 லட்சம் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். அது போல் இந்த 10 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ 34.43 கோடி வசூலாகியுள்ளது. சுமார் 1.20 பக்தர்கள் ரூ 300 தரிசன டிக்கெட்டில் தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications