திருமலை திருப்பதியில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? இந்த வீடியோ பாருங்க
திருப்பதி: உலகப்புகழ் பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெருமாளை வாழ்த்தி அதிகாலையில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா? 8ம் வகுப்பு மாணவியாக ஒருவர் பாடிய பாடல் இன்று வரை திருப்பதியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரை பற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்த்த பலர், இவரது குரலா என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய பணக்கார கடவுள்களில் ஒன்று என்றால் அது திருப்பதி ஏழுமலையான் தான். இவரை தரிசிக்க ஏழைகள் முதல் கோடீஸ்வரர்கள் வரை பலரும் தவம் இருக்கிறார். இந்த கோயில் ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள உலகப் புகழ் பெற்ற வைணவத் திருத்தலமாகும். இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்ய வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களால் திருவேங்கடம் என்று அழைக்கப்படும் இந்த கோயில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது.

இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கிறது. திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி கோயிலும், திருப்பதியில் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலும் அமைந்துள்ளது.
சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைக் கொண்ட இந்த ஏழுமலையில் அமைந்துள்ள வெங்கடாசலபதியான பாலாஜியை தரிசனம் செய்ய எப்போது சென்றாலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். விஐபிக்களே இங்கு தரிசனம் செய்வது அவ்வளவு எளிதானதாக இருப்பது கடினம். இங்கு சுவாமியை தரிசனம் செய்ய பல ஆயிரம் பேர் எப்போதும் காத்திருப்பார்கள் என்பதால், 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட்டும் ஐஆர்சிடிசி டிக்கெட் போல ஆன்லைனில் உடனே தீர்ந்துவிடும்.
திருப்பதியில் ஒலிக்கும் குரலுக்கு சொந்த கார்ர்...... pic.twitter.com/p5VwtQyiTY
— Srinivasa Subramanian G (@chiterumbu) August 18, 2024
திருப்பதி திருமலைக்கு ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் மீண்டும் பெருமாளை தரிசனம் செய்வது வாடிக்கை. திருமலைக்கு வந்தால் திருப்பங்கள் வரும் என்று பக்தர்கள் மிகவும் ஆழமாக நம்புகிறார்கள். இங்கு கோயிலில் அதிகாலையில் பாடும் பெண் குரல் பலருக்கும் பிடிக்கும். அந்த குரல் பல வருடங்களாக திருப்பதி திருமலையில் ஒலித்து வருகிறது. ஓம் நமோ வெங்கடேசா என்று ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் தனது மகளுடன் பிரபல தெலுங்கு ஊடகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்படியே பாடிக்காட்டினார். இதை பார்த்து பலர் வாயடைத்து போனார்கள்.












Click it and Unblock the Notifications