எல்லோரும் லட்டில் கை வைக்க முடியாது! திருப்பதி லட்டை தயாரிப்பது யார் தெரியுமா? எப்படி தவறு நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஒரு சிலரால் மட்டுமே.. கைப்பட தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு எப்படி மாட்டு கொழுப்பு மூலம் உருவாக்கப்பட்டது.. இந்த கொடூரம் எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை பற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு என்பது திருப்பதியில் உள்ள திருமலா வெங்கடேஸ்வரா கோயிலில் வெங்கடேஸ்வரருக்கு நைவேத்தியமாக வழங்கப்படும் லட்டு ஆகும். கோயிலில் தரிசனம் செய்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இது உலக பிரசித்தி பெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில் வாரியத்தால் 'பொடு' என்று அழைக்கப்படும் கோயில் சமையலறையில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் மட்டுமே அதைத் தயாரித்து விற்க முடியும்.

tirupati

இந்த லட்டை எல்லோரும் அவ்வளவு எளிதாக தயாரிக்க முடியாது. அதற்கு காப்பி ரைட் உள்ளது. அதோடு கோவில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டை தயாரிக்க நிறைய தகுதிகள் உள்ளன. வைஷ்ண பிராமணர்கள் மட்டும் இதை தயாரிக்க விண்ணப்பிக்க முடியும். அதிலும் எல்லோரும் இதை தயாரிக்க முடியாது. வைஷ்ண பிராமண பிரிவில் உள்ளவர்களும் இதை தயாரிக்க முறையான பயிற்சி எடுத்திருக்க வேண்டும்.

ஆகம விதிப்படி பயிற்சி எடுத்தவர்கள் மட்டுமே இதை தயாரிக்க விண்ணப்பிக்க முடியும். இது போக இவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்கள் வெளியே எல்லாம் லட்டு தயாரிக்க முடியாது. கோவில் உள்ளே மட்டுமே லட்டை தயாரிக்க முடியும். தேவஸ்தானத்தின் கோயில் வாரியத்தால் 'பொடு' என்று அழைக்கப்படும் கோயில் சமையலறையில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.

என்னென்ன பொருட்கள் இருக்கும்?: இதில் சேர்க்கப்படும் பொருட்களின் தொகுப்பை திட்டம் என்பார்கள். திட்டம் என்பது திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களின் பட்டியல் மற்றும் அதன் விகிதங்கள். லட்டுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக, வரலாற்றில் ஆறு முறை மட்டுமே இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

தற்போது உள்ள பொருட்களில் கிராம் மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, சர்க்கரை மிட்டாய் மற்றும் திராட்சை ஆகியவை அடங்கும். ஒரு நாளைக்கு சுமார் 10 டன் கிராம் மாவு, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ சர்க்கரை மிட்டாய் மற்றும் 540 கிலோ திராட்சை லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. TTD இந்த பொருட்கள் அனைத்தையும் டெண்டர்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் கொள்முதல் செய்கிறது.

லட்டு மாட்டு கொழுப்பு: திருப்பதி கோவில் லட்டில் பயன்படுத்தப்பட்ட இந்த நெய்யில்தான் மாட்டுக்கொழுப்பு இருப்பதாக கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. திருப்பதி கோவிலில் தயாரிக்கப்பட்ட லட்டுகள் மீதான சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. மொத்தம் 5 சாம்பிள் எடுத்துள்ளனர். இவற்றில் "வெளிப்புற" கொழுப்பு இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இதன் கொழுப்பு மதிப்பு எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது. 5 சாம்பிள் மதிப்புகள் முறையே, 86.62 , 106.89, 22.43, 117.42, 19.72 ஆகும். இந்த 5 மதிப்புகளில் 2 மற்றும் 3வது சாம்பிள்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு கூடுதலாக உள்ளது. மற்றவர்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எஸ் மதிப்பு குறைவாக உள்ளது. இப்படி குறைவாகவோ, கூடுதலாகவோ இருந்தால்.. அதில் வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தம்.

கொழுப்பில் இருக்கும் ஷாக்கிங் பொருட்கள்: இதில் சாம்பிள் ஒன்றில் சோயா பின் அவரை, சூரியகாந்தி, ஆலிவ், ராப் விதை, லிப் விதை, கோதுமை, மக்காச்சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், கொழுப்பு இருக்கலாம்.சாம்பிள் இரண்டில், தேங்காய் மற்றும் பனை கருப்பட்டி கொழுப்பு. சாம்பிள் மூன்றில் பாம் எண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி சாம்பிள் நான்கில் பன்றிக்கொழுப்பு இருந்திருக்கலாம் என்று முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

இவற்றில் எதுவாகவும் இருக்கலாம். எதிலும் உறுதியாக முடிவு சொல்லப்படவில்லை. மீன் எண்ணெய் அல்லது மாட்டுக் கொழுப்புதான் என்று சொல்ல முடியாது. முக்கியமாக standard s value- வரம்பு வைத்து ஒரு முடிவிற்கு வர முடியாது. பசு மாட்டை தவிர வேறு மாட்டின் நெய்யை பயன்படுத்தினால், மாட்டிற்கு அதீத தீவனம் கொடுத்தால் அல்லது மாட்டிற்கு மிக குறைவாக தீவனம் கொடுத்தால் கூட அதன் நெய்யில் இருக்கும் கொழுப்பு இந்த மாதிரி தவறான எஸ் மதிப்புகளை காட்ட வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+