திருப்பதி உண்டியலில் கண்ணை உறுத்திய தங்க பிஸ்கட்... ஒரு நிமிட சலனம்.. திசைமாறிய ஊழியர் வாழ்க்கை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்ககிறார்கள். அப்படி ஏழுமலையானை பார்க்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு காணிக்கையை திருமலையில் உள்ள உண்டியலில் செலுத்துகிறார்கள். பணம், தங்கம், வெள்ளி போன்றவை செலுத்தப்படுகிறது. அப்படி செலுத்தப்பட்ட தங்க பிஸ்கட்டை திருடியுள்ளார் ஊழியர் ஒருவர். டிராலி வாகனத்தில் கையும் களவுமாக சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானான வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்கிறார்கள். திருமலையில் ஏழுமலையானை காணும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடிந்ததும் பிரகாரத்தை வலம் வரும்போது, அங்குள்ள பிரதான உண்டியல்களில் தங்கம், வெள்ளி, ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்கள் போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்துவார்கள்.

அப்படி செலுத்தப்படும் காணிக்கையை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் எடுத்து சென்று எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்வார்கள். இந்நிலையில் ஏழுமலையானுக்கு பக்தர் ஒருவர் பிரதான உண்டியலில் காணிக்கையாக தங்கப் பிஸ்கட்டை செலுத்தி இருந்தார். இந்நிலையில் கோவிலில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்த பென்சிலய்யா என்பவர் திருடி கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு டிராலி வண்டியில் பதுக்கி வைத்துள்ளார்.
அதை, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்தார்கள். பென்சிலய்யாவை பிடித்து விசாரித்தனர். அவர், தங்கப் பிஸ்கட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை போலீசில் ஒப்படைத்து, அவர் மீது புகார் அளித்தனர்.
இதையடுத்து திருப்பதி திருமலை-1 டவுன் போலீசார் பென்சிலய்யாவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்து தங்கப் பிஸ்கட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கப் பிஸ்கட் 100 கிராம் எடையில் இருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். திருப்பதி கோவிலில் ஊழியர் தங்கம் திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Rate today: 3 நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. சென்னையில் இன்றைய ரேட் என்ன? -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications