11,800 கிலோ தலைமுடி.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அசத்தல் ஏலம்.. எவ்வளவு லாபம் தெரியுமா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
Recommended Video

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11,800 கிலோ தலைமுடி ரூ.10.07 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாட்டின் பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கு, தங்களது தலை முடியை நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்தி வருகின்றனர் பக்தர்கள்.

இதற்காகவே, கோவில் வளாகத்தில் 'கல்யாண கட்டா' எனும் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை ஒவ்வொரு மாதமும் தேவஸ்தானம் ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறது.
அதன்படி, பக்தர்கள் செலுத்திய தலைமுடி 5 ரகங்களாக பிரிக்கப்பட்டு இ-டெண்டர் மூலம் 11,800 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் 10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் தலைமுடி காணிக்கை மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு நூறு கோடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications