ஏழுமலையானே மீண்டும் நான் அமைச்சராகணும் - திருப்பதியில் வேண்டிக்கொண்ட ராஜேந்திரபாலாஜி
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் மீண்டும் 3வது முறையாக அதிமுக அரசு பதவியேற்கும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவியேற்பார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
திருப்பதி: தேர்தல் வெற்றிக்காக திருப்பதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனை செய்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என்றும் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வாக்குகள் பதிவான நாளில் இருந்தே பல வேட்பாளர்கள் தூக்கத்தை தொலைத்து விட்டனர். சிலரோ யாகங்கள், பூஜைகள் என கோவில் கோவிலாக சுற்றி வருகின்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என்றார்.
தமிழகத்தில் மீண்டும் 3வது முறையாக அதிமுக அரசு பதவியேற்கும். முதல்வராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பதவியேற்பார். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமையாக இல்லை. தேர்தல் நேரத்தில் எவ்வாறு சுயமாக செயல்பட்டோம் என்பது அனைவரும் பார்த்திருப்பார்கள். சுயமாக சிந்தித்து தொண்டர்களை நம்பி செயல்படக்கூடிய மாபெரும் இயக்கம் அதிமுக என்றும் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் தேதி நெருங்கி வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி திருப்பதி கோவிலுக்கு சென்று வெற்றிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ராஜேந்திரபாலாஜியின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து வெற்றியைத் தருவாரா திருப்பதி பாலாஜி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications