திருப்பதிக்கு போறீங்களா.. இதை தெரிஞ்சுக்காம போகாதீங்க.. தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள்
திருப்பதி: திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சென்று வரும் நிலையில், வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாச்சலபதியை தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் சிறப்பு விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

தினந்தோறும் ஏராளமான மக்கள் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்வதால் எப்போது கூட்டம் அதிகரித்தே காணப்படும். திருப்பதிக்கு பேருந்து, கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பதற்கான வந்து செல்கின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் திருப்பதிக்கு வந்து செல்லும் நிலையில், மலைப் பாதையை விரிவாக்கம் செய்து தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மலைப் பாதையில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் வாகனங்களை பக்தர்கள் மெதுவாக இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் விபத்தை தவிர்க்கும் வகையில், தங்களுடைய பயணத் திட்டத்தை மாற்றியமைத்து 1 மணி நேரம் முன்னதாக கோவிலுக்கு வர வேண்டும் என்றும், வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இலவச தரிசனத்தில் பக்தர்கள் சுமார் 16 மணி நேரம் காத்திருந்து நேற்று சுவாமியை தரிசனம் செய்தனர். 69 ஆயிரத்து 609 பேர் நேற்று தரிசனம் செய்துள்ளனர். 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ. 4.11 கோடி வசூலாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications