திருப்பதிக்கு பைக்ல போறீங்களா? அந்த தவறை மட்டும் செய்யாதீங்க! உஷார் மக்களே..ஷாக் வீடியோ
திருப்பதி: திருப்பதி மலை அடிவாரத்தில் பைக்கில் சென்ற இருவரை சிறுத்தை ஒன்று தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக பைக்கில் சென்றவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
திருப்பதியில் உள்ள சேஷாசலம் மலைத்தொடர் மிகவும் அடர்த்தியானதாகும். இது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக இருக்கிறது. சுமார் 825 சதுர கி.மீ அளவுக்கு பரந்து விரிந்து இருக்கும் இந்த மலையில் ஏராளமான மிருகங்கள் வசிக்கின்றன. திருப்பதியின் திருமலை கோயிலும் இந்த மலையில்தான் அமைந்திருக்கிறது.

இந்த மலையில் புலி, சிறுத்தை, கரடி, நரி, காட்டெருமை, மான்கள், அரிய வகை அனில், பல்லி, கொடிய விஷமுள்ள பாம்புகள் என பல்வேறு உயிர்கள் வாழ்கின்றன. எனவே தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சில சமயங்களில் மலைப்பாதையில் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை கரடி தாக்கும் சம்பவமும் நடந்திருக்கிறது. எனவே பாதுகாப்புக்காக ஆங்காங்கே காவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தவிர, முள் வேலிகளும், ஒலி சைரன்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனாலும் தாக்குதல்கள் குறைந்தது மாதிரி தெரியவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. காட்டில் இயற்கையாகவே இரை குறையும்போது வேட்டை விலங்குகள் மனிதர்கள் மீது தாக்குதலை நடத்துகின்றன.
நேற்றும் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது திருப்பதி அடிவாரத்தில் எஸ்.வி. உயிரியல் பூங்கா சாலையில் இரண்டுபேர் ஒரு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது சாலையின் ஓரத்தில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென இவர்கள் மீது பாய்ந்திருக்கிறது. அச்சத்தில் அலறிய அவர்கள், பைக்கை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டியிருக்கிறார்கள். இரை தப்பி விட்டதை உணர்ந்த சிறுத்தை உடனடியாக சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டது. இவை அனைத்தும் பின்னால் வந்த காரில் இருந்த டேஷ் போர்டு கேமராவில் பதிவாகியிருக்கிறது.
பொதுவாக மனிதர்களை சிறுத்தைகள் தாக்குவது கிடையாது. ஏனெனில் சிறுத்தையின் மெனு பட்டியிலில் நமது பெயர் இல்லை. ஆனால், எதுவுமே கிடைக்காத போது நம்மை அடித்து திண்பதற்கும் சிறுத்தை தயங்குவதில்லை. மான்கள், பன்றிகள், முயல்கள்தான் சிறுத்தையின் உணவு லிஸ்ட். இவற்றை வேட்டையாட நிறைய திறன் தேவை. ஆனால், காயமடைந்த, நோயுற்ற சிறுத்தைகளால் வீரியமாக வேட்டையாட முடியாது. எனவே மனிதர்கள் எளியதான உணவாக தெரிகிறார்கள்.
తిరుపతి ఎస్వీ జూ పార్క్ రోడ్లో ద్విచక్రవాహనం పై చిరుత దాడి చేసింది. #Tirupati #zooparkroad #tirupatizooparkroad #LeopardAttack #leopard #tirupatiupdates pic.twitter.com/IBiwvW2lpr
— Tirupati Updates (@TirupatiUpdates) July 25, 2025
சில சமயங்களில் சிறுத்தைகள் குழப்பத்தில் மனிதர்களை தாக்கும். மனிதர்கள் குணிந்து இருக்கும்போது மான், காட்டு பன்றி போல சிறுத்தையின் கண்களுக்கு தெரியலாம். எனவே வேட்டையாடும். திருப்பதியிலும் இப்படித்தான் நடந்திருக்கிறது. அதாவது, பைக்கில் போய்க்கொண்டிருந்த மனிதர்கள், சிறுத்தையின் கண்களுக்கு பெரிய சைஸ் மான் போல தெரிந்திருக்கலாம். எனவே, வேட்டையாட முயன்றிருக்கும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே அடுத்த முறை திருப்பதிக்கு பைக்கில் போகிறீர்கள் எனில் எக்ஸ்ட்ரா கவனம் முக்கியம் மக்களே! முடிந்த அளவுக்கு பகலில் பயணத்தை முடித்துக்கொள்ளுங்கள். இரவில் போகிறீர்கள் எனில் பைக்கை விட, காரில், பேருந்தில் பயணிப்பது பாதுகாப்பானதாகும்.












Click it and Unblock the Notifications