திருப்பதிக்கு போறீங்களா? இனி லட்டு வாங்க வரிசையில் நிற்க வேண்டாம்! தேவஸ்தானம் அசத்தல்!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதியில் உள்ள லட்டு கவுன்ட்டர்களில் இனி லட்டு வாங்க வரிசையில் நிற்க தேவையில்லை என்ற சந்தோஷமான விஷயத்தை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் எப்படித்தான் லட்டை வாங்குவது?

உலகில் வாழும் இந்திய மக்கள் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் ஆண்டுதோறும் ஒரு முறையாவது திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதை தங்கள் பாக்கியமாக கருதுகிறார்கள். அப்படி இல்லாவிட்டாலும் கண்களை மூடிக் கொண்டு ஏழுமலையானை நினைத்தாலே போதும் நம் கஷ்டமெல்லாம பஞ்சாய் பறந்துவிடும்.

tirupati spirtuality

அதிலும் ஏழை எளியவர்கள், கஷ்டத்தில் இருப்பவர்கள் பெருமாளே, நாராயணா , கோவிந்தா, மாதவா, மதுசூதனா, கேசவா, பாண்டுரங்கா, கிருஷ்ண பரமாத்வா என அழைத்தால் போதும்! அவருக்குத்தான் 1008 பெயர்கள் இருக்கிறதே! அதில் ஒன்றை அழைத்தாலும் போதுமானது என்கிறார்கள்.

அதிலும் திருப்பதிக்கு சென்று தரிசித்தால்தான் ஏழுமலையானின் ஆசி கிடைக்கும் என்றில்லை, ஏழுமலையானின் லட்டு பிரசாதத்தை சாப்பிட்டாலே போதும். அவரது பூரண அருள் கிடைத்துவிடும். அந்த லட்டு விவகாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் கலியுக தெய்வம் ஏழுமலையானின் கோயிலுக்கு கூட்டம் குறையாமல் பக்தர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருப்பதி லட்டுக்கென புவிசார் குறியீடு இருக்கிறது. எனவே இந்த லட்டை யாரும் தயாரித்து அதை திருப்பதி லட்டு என சொந்தம் கொண்டாட முடியாது. திருப்பதி லட்டை நாம் காசு கொடுத்து வாங்கும் தொகையை காட்டிலும் ஒரு லட்டை தயாரிக்கும் செலவானது அதிகம்!

ஆனாலும் பொதுமக்களுக்கு தரமான லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருப்பதியில் தற்போது ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு லட்டு வழங்கப்படுகிறது. இது லட்டு மீதான முறைகேடுகளை தவிர்க்க தேவஸ்தானம் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது.

திருப்பதியில் தற்போது லட்டு வழங்க புதிய முறை தொடர்கிறது. அதாவது ஆதார் எண் அடிப்படையில்தான் லட்டு பிரசாதங்கள் வழங்கப்படும். ஆனால் இனிமேல் ஸ்கேனிங் இயந்திரங்கள் மூலம் லட்டு விநியோகம் செய்யப்படுகிறது. அதாவது பிரசாத கவுன்ட்டரில் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

அதன் பிறகுதான் இயந்திரம் மூலம் லட்டுகளை பெற முடியும். இதன் மூலம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்படுகிறது. திருப்பதியில் 6 கவுன்ட்டர்களில் ஸ்கேனிங் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை கவுண்டர் எண் 51 முதல் 61 வரை அமைக்கப்படுவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால் அனைத்து கவுன்ட்டர்களிலும் இந்த நடைமுறையே கொண்டு வரப்படும். இதனால் லட்டு விற்பனையில் முறைகேடு, இடைத்தரகர்கள், புரோக்கர்களின் தில்லுமுல்லு குறையும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு தற்போது தேவஸ்தானம் ஒரு லட்டை டோக்கன் முறையில் இலவசமாக கொடுக்கிறது. அதிக லட்டுகள் வேண்டுமானால் கவுன்ட்டர்களில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+