Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி வந்தா திருப்பம்.. பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேராக திருமலைக்கு செல்லும் பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: பிரதமர் மோடி இன்று மாலை விமானம் மூலம் திருப்பதி செல்ல உள்ளார். அவர் நாளை காலையில் ஏழுமலையானை தரிசனம் செய்யவுள்ளார். மோடி வருகையையொட்டி திருப்பதியில் அனைத்து வி.ஐ.பி. தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ன. இந்த முறை எப்படியாவது ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் பாஜகவும், காங்கிரஸும் மிக தீவிரமாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா என கட்சியின் முக்கிய புள்ளிகள் தெலங்கானாவில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

PM Modi to arrive in Tirupati today, to visit Tirumala tomorrow

தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தெலுங்கானாவில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 7 மணியளவில் திருப்பதி செல்கிகிறார். விமானம் மூலம் புறப்பட்டு, திருப்பதிக்கு இரவு 7 மணிக்கு வருகை தர உள்ளார் பிரதமர் மோடி. ரேனிகுண்டா விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆளுநர் அப்துல் நசீர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இன்று இரவு ஓய்வு எடுக்கிறார். பின்னர், நாளை (நவம்பர் 27) காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார்.

பிரதமர் மோடியின் திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி முழுவதும் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் முதல் திருமலை வரை பிரதமர் பயணம் செய்ய இருக்கும் வழித்தடம், அவர் திருமலையில் தங்க இருக்கும் விருந்தினர் மாளிகை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், பிரதமர் மோடி திருப்பதிக்கு வருகை தருவதையொட்டி, நாளைய தினம் (நவம்பர் 27) விஜபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதாவது, நவம்பர் 27ம் தேதி விஐபி தரிசனம் ரத்து என்றும், நவம்பர் 26ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் எதுவும் ஏற்கப்படாது என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பிற வகை தரிசனமும் தாமதம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா தேர்தல் நெருங்கும் நிலையில், 5 மாநில ரிசல்ட் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் திருப்பதியில் தரிசனம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரதமர் மோடிக்கும் இந்த தரிசனம் திருப்பம் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+