2024 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் இத்தனை ஆயிரம் கோடியா?
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ரூ 1365 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசிக்கிறார்கள். பண்டிகை காலம், விழாக் கோலம் என்றால் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். அது போல் வார இறுதி நாட்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஏகாதசி போன்ற நாட்களில் கூட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதன் மூலம் பக்தர்களின் உண்டியல் காணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் முதல் நாளுக்கான உண்டியல் காணிக்கை, தரிசன நேரம் குறித்து தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 2024 ம் ஆண்டு மட்டும் ஏழுமலையானை 2.55 கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் ரூ 1,365 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. 99 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 6.30 கோடி பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. 12.15 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை தேவஸ்தானம் வழங்கியது.












Click it and Unblock the Notifications