ஜம்முவில் அருள்பாலிக்கும் திருப்பதி ஏழுமலையான்..கும்பாபிஷேகத்தில் விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்

Subscribe to Oneindia Tamil

சிம்லா: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

கலியுக கடவுளாக பக்தர்களால் கொண்டாடப்படும் சீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருகின்றனர். மணிக்கணக்கில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள்.

Sri Venkateswara swamy vari temple Maha Samprokshana at Jammu

ஏழுமலையானை தரிசிக்க வரும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருவதால் கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. பக்தர்கள் வசதிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையானுக்கு கோயில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

டெல்லி, புவனேஸ்வர், கன்னியாகுமரி ஹைதராபாத் ஆகிய ஐந்து இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில்கள் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஆறாவதாக ஜம்முவின் மஜீன் பகுதியில் எழில்மிகு ஷிவாலிக் வனப்பகுதியின் மத்தியில் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோயில் கட்டப்பட்டு வந்தது. இதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் பரப்பளவு நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஆண்டு வழங்கியது.

இந்த இடத்தில் சுமார் ரூ.33 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டு வந்தது,. கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற நிலையில், இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திருப்பதி கோயிலில் எந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைகள் ஜம்மு கோயிலிலும் பின்பற்றப்படு என திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஜம்மு ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒரு வார காலமாக பூர்வாங்க பூஜைகள், யாகசாலை பூஜைகள், கலச பிரதிஷ்டை ஆகியவை உள்ளிட்ட வைதீக நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று காலை 7:30 மணி முதல் 8:15 மணி வரை மிதுன லக்னத்தில் அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திர கோஷத்துடன் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது தேவஸ்தான தலைமை அர்ச்சகர் கோவில் கோபுர கலசம் மீது புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு வணங்கினர்.

கும்பாபிஷேக விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை இந்த கோவிலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

இந்த கோவில் ஆந்திராவுக்கு வெளியே தேவஸ்தானம் கட்டியுள்ள ஆறாவது ஏழுமலையான் கோவில் ஆகும். புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயில் அமைந்திருக்கும் ஜம்மு - கத்ரா பகுதிகளுக்கு இடையே இந்த ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. ஜம்முவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக விளங்குவதுடன், அப்பகுதியில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர். நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+