திருப்பதி ஏழுமலையானை மிக எளிதாக தரிசிக்க சூப்பர் வாய்ப்பு.. நாளை காலை 11 மணிக்கு மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: பிப்ரவரி மாதத்துக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிப்ரவரி மாதம் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் அருகில் இருந்து விரைவில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் அதற்கு 300 ரூபாய் டிக்கெட் அல்லது விஐபி டிக்கெட் வாங்க வேண்டும். அப்படி வாங்க வேண்டும் என்றால் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கும் போது கவனித்து வாங்க வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கான டிக்கெட் அதற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே வெளியிடப்படும். அதுவும் ஆன்லைனில் மட்டுமே வெளியிடப்படும். அந்த சமயத்தில் கவனித்து வாங்கினால் 300 ரூபாய் டிக்கெட்டை எளிதாக பெற முடியும்.

tirupati temple tirumala

அதேபோல் இன்னொரு வகையான டிக்கெட்டும் உள்ளது. அது எப்படி என்றால் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிறப்பு தரிசனம், இந்த டிக்கெட்டும் அதே நாளில் வெளியிடப்படும். இந்த இரண்டு டிக்கெட்டுகளையும் திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு மாதத்திற்கும் வெளியிடுவது வழக்கம்.

இந்த டிக்கெட்டுகளை வாங்கி திருப்பதி திருமலை சென்றால், ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்ய முடியும். இதனால் எப்போது ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு வெளியிடப்படும் என்ற ஆர்வம் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு உண்டு. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்களை ஆன்லைனில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

பிப்ரவரி மாதத்துக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு நாளை காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிப்ரவரி மாதம் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

பிப்ரவரி மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு (ரூ.300 தரிசன டிக்கெட்) 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. திருமலை மற்றும் திருப்பதியில் பிப்ரவரி மாதத்துக்கான அறை ஒதுக்கீடு 25-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்" இவ்வாறு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+