மகளின் மெலிந்த உடலை அடையாளம் தெரியாமல்.. மாம்பழ தோட்டம் 4 ஏக்கர் நிலம்.. பசியிலேயே போயிட்டியா லஷ்மி
திருப்பதி: காலங்கள் எவ்வளவு மாறினாலும், தொழில்நுட்பம் எவ்வளவுதான் பெருகினாலும், கல்வி எவ்வளவு அதிகரித்தாலும், வரதட்சணை கொடுமை மட்டும் நம்முடைய நாட்டில் இன்னமும் அப்படியே உள்ளது.. வரதட்சணை கொடுமைகளின் வடிவங்கள்தான் மாறுகிறதே, தவிர, வரதட்சணை கொடுமையால் உயிரை விடும் பெண்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இதோ தெலுங்கானாவில் இந்த பரிதாப பெண்ணுக்கு என்ன நடந்தது பாருங்க.
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் மண்டலத்தில் உள்ளது விஸ்வநாதம்புரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் லட்சுமி பிரசன்னா... இவரது கணவர் பெயர் பூலா சுரேஷ்பாபு.. இந்த தம்பதிக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது..

இந்த திருமணத்துக்கு, வரதட்சணையாக 2 ஏக்கர் மாம்பழத்தோட்டம், 2 ஏக்கர் வயல், ரூ.10 லட்சம் தங்க நகைகள், இதுபோக ரூ.10 லட்சம் ரொக்க பணம் என லட்சுமி வீட்டில் கொடுத்துள்ளனர்.
தம்பதியினரும் மகிழ்ச்சியாக தங்கள் திருமண வாழ்க்கையை துவங்கினார்கள்.. திருமணமாகி ஒரு வருடம் கழித்து, இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
வரதட்சணை நகை, பணம்
கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சுரேஷ் பாபு, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு, லட்சுமியின் வீட்டில் அதாவது தன்னுடைய மாமனார் வீட்டிலேயே வந்து தங்கினார். பிறகு, 3 வருடங்களுக்கு முன்பு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் அஸ்வராவ்பேட்டையிலுள்ள தன்னுடைய மைத்துனி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி, லட்சுமியின் பெற்றோருக்கு போன் செய்த சுரேஷ் பாபு, உங்களது மகள் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.. காயங்கள் அதிகமாக இருப்பதால், ராஜேமஹேந்திரவரத்தில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாக சொன்னார்..
படுக்கையில் லட்சுமி
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாமியார் குடும்பத்தினர், பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.. ஆனால், தங்கள் மகள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இங்குமங்கும் தேடினார்கள்..
பிறகு அங்கிருந்த ஒரு படுக்கையில் லட்சுமி இருந்ததை கண்டு நிலைகுலைந்து போய்விட்டனர்.. காரணம், அடையாளம் தெரியாத அளவுக்கு லட்சுமியின் உடல் மெலிந்து கிடந்தது.. உடம்பெல்லாம் பல இடங்களில் காயங்கள் கடந்தன.. அதுமட்டுமல்ல, லட்சுமி சடலமாக கிடந்தார்.
எலும்பும் தோலும் மகளின் கோலம்
மகளை இந்த கோலத்தில் கண்டதுமே அனைவருமே கதறி அழுதனர்... அடையாளம் தெரியாத உருவத்தில் இருப்பதுடன், பிணமாகவும் கிடந்ததை பெற்ற தாயால் ஜீரணிக்கவே முடியவில்லை..
வரதட்சணை கேட்டு, தங்கள் மகளை சித்ரவதை செய்து கொன்று விட்டார்களே என்று மொத்த குடும்பத்தினரும் கதறி அழுதனர்.. மகளின் மரணத்துக்கு காரணம் கணவர் சுரேஷ், அவரது அத்தை விஜயலட்சுமி, சகோதரிகள் தாசரி பூலட்சுமி , அவரது கணவர் ஸ்ரீனிவாஸ் ராவ் தான் என்றும் குற்றஞ்சாட்டினார்கள்..
ஆளே அடையாளம் தெரியல
அதாவது, வரதட்சணை அதிகமாக வேண்டும் என்று கேட்டு லட்சுமியை அடைத்து தங்கள் வைத்து, சரியாக சாப்பாடு தராமல் இருந்திருக்கிறார்கள்.. பசியும், பட்டினியிலுமே லட்சுமியின் உயிர் போய்விட்டதாக கதறி அழுகிறார்கள்.. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
லட்சுமி மருத்துவமனையில் உள்ள போட்டோதான் இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அவரது பழைய போட்டோவுக்கும், தற்போதைய போட்டோவுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டு பொதுமக்கள் உறைந்து போயிருக்கிறார்கள்.

உலுக்கியெடுத்த துஷாரா கேஸ்
இந்த சம்பவத்தை போலவே, கேரளாவிலும் ஒரு கொடுமை நடந்தது.. துஷாரா வரதட்சணை கேஸ் என்றால் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலம்.
துஷாராவுக்கு கடந்த 2013-ல் திருமணம் நடந்தது.. 25 பவுன் நகைகளும், ரூ. 5 லட்சம் பணமும் வரதட்சணையாக தந்திருக்கிறார்கள்.. கூடுதல் வரதட்சணை கேட்டு, துஷாராவை கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், 2018ல், துஷாரா இறந்துவிட்டார்.. ஆனால், எப்படி இறந்தார் என்று உடனடியாக யாருக்குமே தெரியவில்லை. போலீசார் இது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டபோது, துஷாராவின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது வெறும் 20 கிலோ மட்டுமே துஷாராவின் மொத்த உடல் எடை இருந்துள்ளது.. பட்டினி போட்டே துஷாராவை கொன்றிருப்பதை அறிந்து ஒட்டுமொத்த கேரளாவும் அதிர்ச்சியடைந்தது நினைவிருக்கலாம்.. இப்போது தெலுங்கானாவிலும் ஒரு உயிர் எலும்புக்கூடாய் கரைந்து போய்விட்டது...!!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications