சும்மா டிரெய்லர்தான்.. ரோஜாவின் நிர்வாண படத்தை முழுசாக வெளியிடுவோம்.. தெலுங்கு தேசம் வார்னிங்
திருப்பதி: ஆந்திர அமைச்சர் ரோஜாவின் நிர்வாணப் படத்தை முழுமையாக வெளியிடுவோம் என தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவர் அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளவர் ரோஜா. இவர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சித்ரவதை செய்கிறார்கள்.

சட்டசபையிலும் சிடிக்களை காட்டினார்கள். ஆனால் அந்த சிடியில் இருப்பது நான்தான் என நிரூபிக்கப்படவில்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது.
அப்படியிருக்கும் போது என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சி, பெண்களை விளையாட்டு பொருளாக நடத்துகிறது என கூறிய ரோஜா உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். பின்னர் அவர் தொடர்கையில் உங்கள் வீட்டில் உள்ள பெண்களை பற்றி இப்படி பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா?
முன்னாள் அமைச்சர்கள் காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா, சந்திரபாபு நாயுடு, நர லோகேஷ் ஆகியோர் பண்டாருவை கண்டிக்காதது ஏன்? தெலுங்கு தேசம் ஒரு திரையுலக பிரமுகரால் நிறுவப்பட்ட கட்சி. பண்டாரு சத்தியநாராயணனின் பேச்சுக்கு அவருடைய மனைவி அவரை பளார் என அறைந்திருக்க வேண்டும்.
நர லோகேஷ் வெட்கமே இல்லாமல் ட்வீட் செய்கிறார். சந்திரபாபு நாயுடு என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தது ஏன், நான் நிர்வாண படத்தில் நடித்தவள் என்றால் என்னை ஏன் சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்த்தார். உங்கள் கட்சியில் இருக்கும் போது நான் நல்லவராகவும் வேறு கட்சிக்கு சென்றால் நான் எப்படி கெட்டவராகவும் இருக்க முடியும்?
நான் சினிமாவில் நடித்ததால் என்னை என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? உங்களை போன்றோர் இப்படி எல்லாம் பெண்களை அவதூறாக பேசினால் அரசியலில் பெண்கள் எப்படி முன்னேறுவார்கள், எப்படி அரசியலுக்கு வருவார்கள்? பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி கருத்து தன்னை மிகவும் புண்படுத்தி உள்ளது.
கேள்வி கேட்டால் என்னை தாக்கி பேசுவார்களா, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள். தெலுங்கு தேசம் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை, அக்கட்சியால் அரசியல் ரீதியில் வளரவே முடியாது. பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என ரோஜா தெரிவித்தார்.
அமைச்சர் ரோஜா அழுதபடியே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ரோஜா குறித்து அவதூறு பேசியதாக போலீஸார் பண்டாரு மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி மகளிர் அணித் தலைவர் வாங்கலபுடி அனிதா அமைச்சர் ரோஜாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அனிதா கூறுகையில், அமைச்சர் ரோஜா தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசியிருக்கிறார். அப்போது காவல் துறை ஏன் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர்கள் மட்டும்தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?
கடந்த காலங்களில் சட்டப்பேரவையில் ரோஜா பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ரோஜாவை யாரும் பெண் என்று கருதவில்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இருப்பவர்கள் கூட ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களின் அனுதாபத்தை பெறுவதற்காக ஒருநாள் அழுதார். இப்போது ரோஜா நடித்த "படத்தின்" டிரெய்லர் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. இன ஒரிஜினல் படத்தை வெளியிடுவோம் என அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications