திருப்பதியில் உடம்பு முழுக்க 4 கிலோ தங்க நகைகளுடன் கோல்ட் மேன்.. நகை பிரியர் விஐபியின் தங்க தரிசனம்
திருப்பதி: உலகிலேயே மிக அதிக வருமானம் ஈட்டும் ஆன்மீகத் தலங்களில் முதன்மையானதாகத் திகழும் திருப்பதி ஏழுமலையான் கோவில், தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்வசம் ஈர்க்கும் ஒரு மகா சக்தியாகத் திகழ்கிறது.. இந்தகோயிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவரின் போட்டோதான் இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
திருமலையில் ஏழுமலையான் மீது கொண்டுள்ள அதீத பக்தியின் காரணமாக, சாமானிய மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை தங்களால் இயன்ற காணிக்கைகளை அள்ளி வழங்குகின்றனர்..

திருமலை திருப்பதி கோயில்
பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைத் தொகையானது, தினந்தோறும் பல கோடிகளைத் தாண்டிச் சாதனை படைத்து வருகிறது.. இப்படி சேகரிக்கப்படும் உண்டியல் வருமானம், கோவிலின் பராமரிப்புப் பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், அன்னதானம் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது..
குறிப்பாக, ஏழுமலையானின் திருப்பாதங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்குத் தேவையான தங்கும் வசதி, குடிநீர் மற்றும் லட்டு பிரசாதத் தயாரிப்பு போன்ற பணிகளுக்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு பிரம்மாண்ட நிர்வாகக் கட்டமைப்பைச் செயல்படுத்தி வருகிறது..
இந்த ஆன்மீக பெருமைக்கு மத்தியில், நேற்று திருப்பதியில் நடைபெற்ற தரிசன விவரங்கள் மற்றும் உண்டியல் வருமானம் குறித்த தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன..
தேவஸ்தானம் உண்டியல்
கடந்த ஒரே நாளில் மட்டும் 67,264 பக்தர்கள் ஏழுமலையானை நேரில் தரிசனம் செய்துள்ளனர்.. இதில் 29,410 பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக முடி காணிக்கைச் செலுத்தியிருக்கிறார்கள். பக்தர்களின் வேண்டுதலால் நேற்று ஒரே நாளில் உண்டியலில் ரூ. 4.28 கோடி காணிக்கையாக வசூலானது..
அதேபோல நேரடி இலவச தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்யும் நிலை இருந்தது.. இத்தகைய பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், சில பக்தர்களின் வினோதமான மற்றும் வியக்கத்தக்க பக்தி வெளிப்பாடுகள் மற்ற பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.
நேற்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்காகத் தெலுங்கானா ஹாக்கி சங்க தலைவரான விஜயகுமார் வந்திருந்தார்.. நகை பிரியரான இவர், ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது, அவரது உடல் முழுவதும் சுமார் 4 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்திருந்தார்.. கழுத்து முதல் கை வரை ஜொலிக்கும் தங்க நகைகளுடன் அவர் வந்த காட்சி அங்கிருந்த பக்தர்களைத் திகைக்க வைத்தது..
4 கிலோ தங்க நகைகள்
இதேபோல் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர சோனி என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் தரிசனத்திற்காக வந்திருந்தனர்.. அவர்கள் ஒவ்வொருவரும் ஏழுமலையான் உருவம் பதித்த தலா அரை கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்திருந்தனர்.. ஒரு குடும்பமாகச் சேர்ந்து மொத்தம் 4 கிலோ தங்க நகைகளுடன் அவர்கள் வலம் வந்ததைக் கண்ட பக்தர்கள் வியப்புடன் பார்த்தார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தங்க நகைகளை அணிந்து வருவதும், அவற்றைக் காணிக்கையாக வழங்குவதும் நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் ஒரு நடைமுறைதான் என்றாலும், ஒரே நேரத்தில் பல கிலோ எடையுள்ள நகைகளுடன் பக்தர்கள் வரிசையில் நிற்பது திருமலையில் ஒரு பரபரப்பான சூழலை உருவாக்கி விட்டது..
ஏழுமலையானின் அருளைப் பெறுவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மத்தியில், இப்படி ஜொலி ஜொலிக்கும் நகை பக்தர்களின் பக்தி காட்சிகள்தான் சோஷியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications