திருப்பதிக்கு செல்ல ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்! சித்திரை 1-க்கு போட்டா போட்டி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. அப்போது 4.38 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டன. அவை முற்றிலும் விற்பனையாக அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது.
ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் புக்கிங் சற்றுதாமதமானது. வார நாட்களில் புக்கிங் செய்ய பலர் முன்வராததால் அந்த டிக்கெட்டுகள் அப்படியே இருந்தன. பின்னர் சிறிது நேரம் கழித்து தீர்ந்தது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால் அன்றைய தினம் மக்கள் வேகமாக புக்கிங் செய்தனர். சித்திரை 1 திங்கள்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை என்பதால் அந்த தேதியில் புக்கிங் செய்ய கடும் போட்டி ஏற்பட்டது.

திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் ரூ 300 தரிசன டிக்கெட், இலவச தரிசனம், நடைபாதை தரிசனம், ஆர்ஜித சேவைகள் மூலமாக பெருமாளை தரிசிக்கிறார்கள்.
ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான அங்கப்பிரதட்சிண சேவைக்கான டிக்கெட்டுகள் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டன.
சுமார் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியான நிலையில் 3 நிமிடங்களில் தீர்த்துவிட்டன. அது போல் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் இன்றைய தினம் ஏப்ரல் மாதம் ஏழுமலையானை தரிசிக்க ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. சுமார் 4.38 லட்சம் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரிலீஸ் செய்தது. அவை சற்று தாமதமாகவே புக்கிங் ஆனது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் மொத்த டிக்கெட்டுகளும் புக்காகின.
இன்று மதியம் 3 மணிக்கு ஏப்ரல் மாதம் சிறப்பு தரிசன டோக்கன்களை பெற்றவர்கள் தங்குவதற்கான அறைக்கான முன் பதிவு நடைபெறும். திருப்பதி, திருமலை, தலகோணம் ஆகிய பகுதிகளில் அறை எடுத்துக் கொள்ளலாம். ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் புக் செய்தவர்கள் மட்டுமே அறை எடுக்க புக்கிங்கில் கலந்து கொள்ளலாம். ஆனால் புக் செய்த எல்லாருக்கும் அறை கிடைக்காது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications