திருப்பதிக்கு மார்ச் மாதம் போறீங்களா? ரூ.300 தரிசன டிக்கெட் வேண்டுமா? காலை 10 மணிக்கு ரெடியா இருங்க
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதம் ரூ 300 சிறப்பு தரிசன டோக்கனை பெற முடியாமல் மிஸ் செய்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். இன்று காலை 10 மணிக்கு புக் செய்துக் கொள்ளலாமே!
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பண்டிகை, விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய 90 நாட்களுக்கு முன்பு ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்களை பெறுவது அவசியம். ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 தேதிகளில் ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்கள் வெளியிடப்படுகின்றன.
அதில் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் வெளியாகின்றன. இவை இன்டர்நெட் ஃபாஸ்ட்டாக இருந்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும். இவை ஃபாஸ்ட்டாக இருந்தாலும் சில நேரம் எந்த தேதியில் செல்வது என்ற குழப்பத்தில் புக்கிங் செய்யும் போது லேட்டாகி, டிக்கெட் ஹவுஸ்ஃபுல்லாகிவிடும்.
இதை தடுக்க முன்கூட்டியே பெயர், வயது, ஆதார் கார்டு எண்ணை ஒரு பேப்பரில் எழுதி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒருவர் டைப் செய்ய செய்ய இன்னொருவர் அந்த விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
இப்படி செய்தும் சில நேரங்களில் டிக்கெட் கிடைக்காது. ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் இல்லாவிட்டால் தர்ம தரிசனம் அல்லது திவ்ய தரிசனம் வழியாக பெருமாளை தரிசனம் செய்யலாம்.
இல்லாவிட்டால் இன்னொரு வழி இருக்கிறது. அதுதான் சீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமம் ஆகும். இதற்கான டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரிலீஸ் செய்கிறது.
இந்த ஹோமத்திற்கான டிக்கெட் 1600 ரூபாய் ஆகும். இதில் ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் 2 எண்ணிக்கையில் கிடைத்துவிடும். ஆனால் இந்த டிக்கெட் அடுத்த மாதம், அதாவது மார்ச் மாதத்திற்கானது.
அலிபிரியில் நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால் மட்டுமே இந்த டிக்கெட் கிடைக்கும். ஒரு ஐடியில் 2 டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும். எனவே பெயர், வயது, ஆதார் அல்லது பாஸ்போர்ட் எண்ணுடன் காத்திருங்கள்.












Click it and Unblock the Notifications