Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி ஏழுமலையானுக்கு அள்ளிக் கொடுத்த பெங்களூர் பக்தர்கள்.. எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கம், வைரம், பணம், தங்கக் காசுகள் போன்றவற்றை சுவாமிக்கு காணிக்கையாச் செலுத்தி வரும் நிலையில், கோடிக் கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 1 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், இன்னொரு பக்தர் ஒருவர் வைரங்கள், வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி சங்கிலியை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருப்பதி திருமலையும் ஒன்று. நினைத்த போதெல்லாம் திருப்பதிக்கு பக்தர்களால் வர முடியாது என்பதும், அப்படி வர நேர்ந்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக திருப்புமுனை ஏற்படும் என்பதும் நம்பிக்கை. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

tirupati-elumalaiyan-temple-bangalore-devotee-donated-rs-1-crore-to-the-sri-venkateswara-anna-pras

வனப்பகுதிக்கு நடுவே

கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேஷாசலம் என்ற மலையில் இந்த திருப்பதி திருமலை அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த மலை அமைந்துள்ளது. கார்கள், வேன்கள், சொகுது பேருந்துகள் என பலவற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். வெளிநாடுகள், வெளியூர், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் சுவாமிக்கு உண்டியல் காணிக்கையாக ஏராளமான மதிப்புக்க மிக்க பொருள்களை காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

பக்தர்கள் காணிக்கை

தங்கக் காசுகள், தங்க ஆபரணங்கள், வைர அணிகலன்கள், பணம் போன்றவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்துவது வழக்கம். அந்த வகையில், பெங்களூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி தொகையை நன்கொடையாக அளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இன்னொரு பக்தர் ஒருவர் வைரங்கள், வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி சங்கிலியை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூர் நபர்

பெங்களூரைச் சேர்ந்தவர் கல்யாண் ராமன் கிருஷ்ணன். இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த நன்கொடையின் மூலமாக ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அறக்கட்டளை சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. கல்யாண் அளித்த செக் ஆனது திருமலையில் உள்ள கூடுதல் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பக்தர் காணிக்கை

அதேபோல, பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு பக்தரான மூர்த்தி என்பவர் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 148 கிராம் எடை கொண்ட வைரம் மற்றும் வைஜயந்தி பதித்த தங்க லட்சுமி சங்கிலியை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+